இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்
09 Oct,2024
இந்தியாவின் 70 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, கடந்த 2022 ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா புறடக்ஸன் தயாரித்திருந்தது.
இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டும் வெளிவந்தன.
பொன்னியின் செல்வன் முதலாவது படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைதிருந்தன.
சிறந்த தயாரிப்பாளர் - லைகா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்
சிறந்த பின்னணி இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான்
சிறந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்
சிறந்த இசை வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.