நடிகர் ரஜினிகாந்த்திற்கு உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
30 Sep,2024
: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்றால் அது ரஜினி தான். அவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸாகிறது.
" உதயநிதி ஸ்டாலினுக்கு போன் போட்ட ரஜினிகாந்த்.. துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளதற்கு வாழ்த்து!" இதற்கிடையே 73 வயதான ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்