இந்த அடிதடி விவகாரத்தில் மனோவின் வீட்டு பணியாளர்கள் இருவர் கைதானார்கள். மதுபோதையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்ட நிலையில் மனோவின் மகன்கள் ஷகீர், ரபீக் தலைமறைவாக உள்ளனர்.
பாடகர் மனோ மகன்கள் அடிதடி விவகாரத்தில், புதிய திருப்பமாக பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில் பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் இளைஞர் மற்றும் 16 வயது சிறுவனை தாக்கிய புகார் எழுந்தது.
நாளை (17-09-2024) மின்தடை ஏற்படும் ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!
இதனைத்தொடர்ந்து மனோவின் மகன்கள் ஷகீர் மற்றும் ரபீக் இருவரும் தலைமறைவானதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஷகீர், ரபீக் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. அதில், மனோவின் மகன்களை 10 பேர் கொண்ட கும்பலும், பதிலுக்கு மனோவின் மகன்களும் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அடிதடி விவகாரத்தில் மனோவின் வீட்டு பணியாளர்கள் இருவர் கைதானார்கள். மதுபோதையில் தாக்கியதாக வழக்கு பதியப்பட்ட நிலையில் மனோவின் மகன்கள் ஷகீர், ரபீக் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையே, தாக்குதல் சம்பவம் தொடர்பான உண்மை வெளிவந்துவிட்டதால், தலைமறைவாக உள்ள தனது மகன்கள் வெளியே வர வேண்டும் என்று பாடகர் மனோவின் மனைவி உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நிகழ்வால் தானும், தனது கணவர் மனோவும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக கவலை கூறினார்.
தாக்குதல் நடத்திய நபர்கள் வெளியாட்களாக இருப்பதால், திட்டமிட்ட சதி என சந்தேகப்படுவதாக மனோவின் மருமகள் அச்சம் தெரிவித்தார்.
மகன்களை தாக்கியவர்கள் தன்னையும் தாக்கியதாக ஜமீலா குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதுதொடர்பாக தங்கள் தரப்பில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் புதிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மை எதுவென போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.