ஒரே கதையில் உருவான இரண்டு திரைப்படங்கள்.. ஒன்று ஹிட்.. மற்றொன்று பிளாப்!
16 Sep,2024
ஒரே கதை மற்றும் ஒரே கதாபாத்திரங்களை கொண்டு வெளியான இரண்டு படங்கள், அதில் ஒரு படம் இந்தியாவில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம், மற்றொரு படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. எந்த படத்தை பற்றி நாம் இங்கு பேசுகிறோம் என்று தெரிகிறதா?.
ராமாயண புராணத்தை அடிப்படையாக கொண்டு இந்த இரண்டு படங்களும் உருவானது. அதில் முதல் படம் அனிமேஷன் பாணியில் வெளியான “ராமாயணம்: தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ்”. 1993ம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கொய்ச்சி சசாக்கி மற்றும் ராம் மோகன் இயக்கிய இந்த படத்திற்கு வன்ராஜ் பாட்டியா இசையமைத்திருந்தார்.
இந்தியாவின் சிறந்த படம் என்று பெயர் பெற்ற “ராமாயணம்: தி லெஜெண்ட் ஆப் பிரின்ஸ்” படத்திற்கு ஐஎம்டிபி மதிப்பீட்டில் 9.2 ரேட்டிங் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ராமாயண கதையை மையமாக வைத்து 2023 ஆம் ஆண்டு ஓம் ராவத் இயக்கத்தில் வெளியான “ஆதிபுருஷ்” திரைப்படம். பிரபல நட்சத்திரங்கள் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைப் அலி கான் மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம் வெளியான முதல் நாளில் ரூ. 100 கோடிக்கு வசூல் செய்தது.
ஆனால் ராமாயண கதையில் இருந்து இது மாறுபட்டுள்ளதாகவும், பல முரண்பாடுகள் இருப்பதாகவும் பலரும் இந்த படத்தை குறித்து பல விதமான விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறாமல் போன “ஆதிபுருஷ்” திரைப்படம் முடிவில் ரூ. 393 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் இந்த படம் பாக்ஸ் ஆபீசில் படுதோல்வியை சந்தித்தது