மலேசிய பிரதமரை சந்தித்த நடிகர் கமல்..!
03 Jul,2024
இந்தியன் 2 பட பிரமோஷனுக்காக சென்ற இடத்தில் மலேசிய பிரதமர் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. கடந்த ஜூன் 1 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், ஜூன் 25 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதனிடையே ரிலீசுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை, மும்பை என இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் இந்தியன் 2 படக்குழு பயணப்பட்டுள்ளது. அந்த வகையில் மலேசிய சென்றுள்ள படக்குழுவினர் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மலேசிய பிரதமராக உள்ள டத்தோ ஸ்ரீ உத்தாமா அன்வார் இப்ராகிமை கமல்ஹாசன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.