டான்ஸ் நடிகையை வேட்டையாடிய முன்னணி ஹீரோ.... பணத்தை சுருட்டிக்கொண்டு கழட்டி விட்ட சோகம்,
                  
                     16 Jun,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நடிகை இவர். இவருடன் நடித்த பல நடிகர்களும், இவரின் அழகில் மயங்கி காதல் வயப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த நடிகையோ சினிமாவும், பணமும் தான் முக்கியம் என கராராக காதலில் விழாமல், பல வெற்றி படங்களை கொடுத்து முன்னேறிக் கொண்டிருந்தார்.
	 
	 
	 
	 
	 
	 
	எப்பேர்பட்ட அழகியாக இருந்தாலும் இந்த நடிகரிடம் சிக்கி தான் ஆக வேண்டும் என்பது போல் தமிழ் சினிமாவில் பிளேபாயாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹீரோவிடம் நடிகை வசமாக சிக்கி இருக்கிறார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் காதலுக்கு எதுவும் முக்கியம் இல்லை என்பது போல் பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.
	 
	சினிமாவே குறிக்கோள் என இருந்த நடிகை, இந்த பிளேபாயின் வலையில் வசமாக சிக்கிக் கொண்டு காதல் மயக்கத்திலிருந்து இருக்கிறார். நடிகரும் பல நாட்களாக நடிகையை வேட்டையாடி வந்திருக்கிறார். இந்த டான்ஸ் நடிகை எப்படியாவது இந்த முன்னணி ஹீரோவை திருமணம் செய்து கொண்டு ஆகி விட வேண்டும் என பலவாறும் திட்டம் போட்டுள்ளார்.
	 
	ஆனால் இந்த ஹீரோவோ சினிமாவில் பல நடிகைகளுக்கு அல்வா கொடுத்தவர். நடிகையை தன் ஆசைக்காக உபயோகப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், இருவரும் காதலில் இருந்த சமயத்தில் நடிகையின் சம்பளத்தை முதற்கொண்டு இவர் தான் வாங்கி வைத்திருப்பாராம். நடிகையும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
	 
	இப்படியே இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்ததால் நடிகைக்கு மொத்தமாக மார்க்கெட் சரிந்து விட்டது. அதே நேரத்தில் நடிகரின் சுயரூபமும் கொஞ்சம் கொஞ்சமாக நடிகைக்கு தெரிய ஆரம்பித்து இருக்கிறது. இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என நேரம் பார்த்து நடிகரை கழட்டி விட்டு விட்டு, இழந்த மார்க்கெட்டை மீண்டும் தன்னுடைய முயற்சியால் பிடித்திருக்கிறார்.