வடிவேலு கூட நடிச்சா அதை பண்ணியே ஆகனும்... இல்லைனா முடியாது - நடிகை பிரியங்கா
07 Jun,2024
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார்.
சில பிரச்சனைகளால் இடையில் சில வருடங்கள் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதன்பின், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என் ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் வடிவேலுவுடன் நடித்துள்ள பிரபல காமெடி நடிகை பிரியங்கா அளித்த பேட்டி ஒன்றில், வடிவேலு குறித்து என்னென்னமோ தகவல்கள் நிறைய பேர் கூறுகிறார்கள். ஆனால் அதைப்பற்றி எனக்கு எதுவும் அறிவும் இல்லை.
என்னை பொருத்தவரை வடிவேலுவுடன் நடிப்பது எனக்கு சுலபமாக தான் இருந்தது. ஒரே ஒரு கடினமான விஷயம் என்னவென்றால் அவர் நடிக்கும் காட்சிகளில் நடிக்கும் பொழுது சிரிப்பை அடக்கி கொண்டு நடிக்க வேண்டும். இதுதான் மிகப்பெரிய சவாலாக எனக்கு இருக்கும். பல காட்சிகளில் சிரித்து விடுவேன்.
இதனாலேயே குறிப்பிட்ட காட்சியை மீண்டும் மீண்டும் படமாக்குவார்கள். அதிக முறை டேக் எடுப்பார்கள். சிரிப்பை கண்ட்ரோல் பண்ணவே முடியாது. ஆனாலும் வடிவேலுவுடன் நடித்தாலே சிரிப்பை கண்ட்ரோல் பண்ணித்தான் ஆக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.