ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார் இதுதான்.. ட்
05 Jun,2024
ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படமானது அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கும் சூழலில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்டு வரவேற்பை பெற்றது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த் வாங்கிய முதல் கார் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ரஜினிகாந்த் என்ற பெயரை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத முடியாது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் அவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முக்கியமாக சாதாரணமானவர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள்தான். ஏனெனில் தனது தனித்துவமான ஸ்டைல், பாடி லாங்குவேஜ், நடிப்பு என ஒவ்வொன்றிலும் ரஜினிகாந்த் அதகளம் செய்பவர். சினிமா துறைக்கு வருபவர்கள் எப்போதும் ரஜினிகாந்த்தை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டதுண்டு. வேட்டையன்: அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் (கெஸ்ட் ரோலில் நடித்தார்) படம் வெளியானது.
அதற்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ஜெயிலர் ரிலீஸ்வரை ரஜினிகாந்த்தின் சூப்பர் ஸ்டார் நாற்காலில் ஆடிக்கொண்டிருப்பதாகவும் விரைவில் அந்த சிம்மாசனத்திலிருந்து ரஜினி இறக்கப்படுவார் என்றும் பலர் பேசினார்கள். ஆனால் ஜெயிலர் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி எப்போது ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்களை பேச வைத்தது. ஆனால் அடுத்து நடித்த லால் சலாம் சறுக்கிவிட்டது. இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் அவர்.
கூலி: அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் இயக்குவதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. கமல் ஹாசனுக்கு எப்படி லோகேஷ் பிரமாண்ட ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் கூலியும் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வறுமையில் ரஜினிகாந்த்: இதற்கிடையே ரஜினிகாந்த் இப்போது பக்குவப்பட்ட மனிதராகவும், உச்சபட்ச பணக்காரராகவும் இருக்கிறார். ஆனால் அவரது ஆரம்ப காலம் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தது. கூலி வேலை, நடத்துநர் என்று ஏகப்பட்ட பணிகளை செய்திருக்கிறார் அவர். பிறகு சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ஆனார். உயர்ந்த இடத்துக்கு சென்றாலும் தனது வறுமையை அவர் மறக்காததால்தான் அவர் எல்லோரிடமும் சகஜமாகவும், எளிமையாகவும் பழகுகிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வதுண்டு.
வமானப்படுத்திய தயாரிப்பாளர்: அதேபோல் தயாரிப்பாளர் ஒருவரிடமும் அவர் அவமானப்பட்டிருக்கிறார். ஒருமுறை சம்பளம் கேட்டதற்கு நீ என்ன பெரிய ஆர்ட்டிஸ்ட்டா உனக்கு சம்பளம் எல்லாம் கிடையாது; நீ போவதற்கு காரும் கிடையாது போ டா என்று சொல்ல; விரக்தியில் ஏவிஎம் ஸ்டூடியோவிலிருந்து தனது அறைக்கு நடந்தே வந்த கதையையும்; பிறகு எப்படியாவது கார் வாங்கிவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை கொண்டிருந்ததாக ரஜினி தர்பார் படத்தின் ஆடியோ லான்ச்சில் தெரிவித்தார். ட்ரெண்டாகும் புகைப்படம்: அவர் எடுத்துக்கொண்ட வைராக்கியத்தின்படி ஒரு, வெள்ளை நிற இத்தாலி ஃபியர்டு காரை வாங்கி ஏவிஎம் ஸ்டூடியோவுக்குள் சென்ற சம்பவத்தையும் ரஜினிகாந்த் சொல்லியிருந்தார். இந்நிலையில் தான் வாங்கிய முதல் காருடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது. அந்தக் காரின் எண் TMU 5004 ஆகும். மேலும் அந்தப் புகைப்படத்தில் ரஜினிகாந்த் விண்டேஸ் லுக்கில் படு கிளாஸாக இருக்கிறார்.