மைக்’ மோகனை காதலித்தாரா பூர்ணிமா பாக்யராஜ்?.
29 May,2024
நடிகர் மோகனை நடிகை பூர்ணிமா காதலித்ததாக பழைய விஷயங்களை கிளறி பேசியுள்ளார் சபிதா ஜோசப். மேலும், மோகனின் வீழ்ச்சிக்கு காரணம் பூர்ணிமா தான் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் உடன் டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் நடித்த பூர்ணிமா அதன் பின்னர் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாந்தனு மற்றும் சரண்யா என இரு குழந்தைகள் அந்த நட்சத்திர தம்பதியினருக்கு உள்ளனர்.
சாந்தனு தமிழ் சினிமாவில் நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். சரண்யா பாரிஜாதம் என்னும் படத்தில் மட்டும் நடித்த நிலையில் அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி விட்டார்.
மீண்டும் நடிக்கும் மோகன்: ஒரு காலத்தில் வெள்ளிவிழா நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த மோகனுக்கு உடலில் மோசமான நோய் இருப்பதாக வதந்திகள் வெளியான நிலையில் அவரது சினிமா வாழ்க்கை அப்போது ஸ்தம்பித்துப் போய் விட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து தற்போது ஹீரோவாக ஹரா படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மோகனை காதலித்த பூர்ணிமா?: மூடுபனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மோகனுக்கு கிளிஞ்சல்கள் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது பூர்ணிமா தான். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பூர்ணிமா நடிகர் மோகனை காதலிக்க தொடங்கினார் என்றும் இருவரும் பாம்க்ரூவ் ஹோட்டலில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்ததை பாக்யராஜே பார்த்து கேலி செய்தார் என்றும் சபிதா ஜோசப் கூறியுள்ளார்.
பல படங்கள்: கிளிஞ்சல்கள் படத்தை தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை, அந்த சில நாட்கள், விதி உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். பூர்ணிமா மோகனை விரும்பினாலும் மோகன் பூர்ணிமாவை விரும்பவில்லை என்றும் அதற்கு பழி வாங்கவே மோகன் பற்றிய வதந்தியை கிசுகிசுவாக பரப்பி விட்டதே பூர்ணிமா தான் என்றும் அப்போது பேச்சுக்கள் எழுந்ததாக மூத்த பத்திரிக்கையாளரான சபிதா ஜோசப் பகீர் கிளப்பியுள்ளார்.
பாக்யராஜுக்கு இரண்டாவது மனைவி: நடிகை பிரவீனா என்பவரை 1981 ஆம் ஆண்டு பாக்யராஜ் திருமணம் செய்தார். மன்மத லீலை, பில்லா, டாக்ஸி டிரைவர், பசி, பாமா ருக்மணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் 25 வயதில் உயிரிழந்து விட்டார். 1983 ஆம் ஆண்டு பிரவீனா உயிரிழந்த நிலையில், டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் ஹீரோயினாக நடித்த பூர்ணிமாவை பாக்யராஜ் காதலித்து 1984-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பூர்ணிமாவுக்கு பாக்கியராஜ் மீது ஏற்பட்ட காதல் காரணமாக அவருடைய 2வது மனைவியாக வர சம்மதம் தெரிவித்து விட்டார்.
அதற்கு முன்னதாக பூர்ணிமா யாரையுமே திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோயின்களுக்கு முத்தம் தரமாட்டேன்..
மோகன் மனைவி: சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த மோகன் 1987ம் ஆண்டு கெளரி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். மோகன் நடித்துள்ள ஹரா திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது. அடுத்ததாக கோட் படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.