பாலுமகேந்திராவிடமிருந்து ஸ்ரீதேவியை காப்பாற்ற கமல் போராடினார்.. இப்படி சொல்றாரே ?
29 May,2024
பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் ஜொலித்தவர். அவரது ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை கவர்ந்தவை. கடைசியாக தலைமுறைகள் படத்தை இயக்கிய அவர் கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் பாண்டியன் பல விஷயங்களை பேசியிருக்கிறார். அவரது பேட்டியை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படியெல்லாம் பேசுறாரு இதெல்லாம் உண்மையா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
பாலுமகேந்திரா தமிழ் சினிமாவின் லெஜண்ட்களில் ஒருவராக திகழ்ந்தவர். அவர் ஒளிப்பதிவு செய்த படங்களும் சரி இயக்கிய படங்களும் சரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை. முக்கியமாக அவரது ஒளிப்பதிவில் பெரும்பாலும் இயற்கை ஒளிகளே பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்தவகையில் பல ஒளிப்பதிவாளர்களுக்கு அவர் முன்னோடியாக திகழ்ந்தார். அதேபோல் தான் இயக்கிய படங்களிலும் சத்தங்களை குறைத்து ஒருவித அமைதியாகவே படங்களை கொண்டு செல்வார்.
முதலில் அவர் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு ஷோபாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு மௌனிகாவுடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். இவர்களில் ஷோபா தற்கொலை செய்துகொண்டார். ஷோபா தற்கொலை செய்துகொள்ளவில்லை; பாலுமகேந்திராவால் கொலை செய்யப்பட்டார் என்ற சர்ச்சை இன்றளவும் உண்டு. ஆனால் பாலுமகேந்திரா கொலை செய்யவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள்.
பாண்டியன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பாலுமகேந்திரா குறித்து சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார். அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பாலுமகேந்திராவைவிடவும் மோசமான பெண் பித்தர் வேறு யாரும் இல்லை. அவர் ஒரு மட்டமான ஆள். அவரது இயக்கத்தில் நடிக்கும் நடிகைகள் திரைப்படம் முடிவதற்குள் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப்படுவார்கள். அவர்களை மனைவியாக்கிக்கொள்ளவும் முயல்வார்.
உதாரணம்: அதற்கு உதாரணமாக ஷோபா, மோனிகாவை சொல்லலாம். மேலும் 23 வயது பெண் ஒருவரை வீட்டிலிருந்து பிரித்து குடும்பம் நடத்தினார். மோனிகாவுடன் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தார். இவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துகிறார் என்று தெரிந்துதான் ஷோபா தற்கொலை செய்துகொண்டார். ஷோபாவின் மரணத்துக்கு காரணமான பாலுமகேந்திராவை எம்ஜிஆர்தான் காப்பாற்றினார்.
சைக்கோ பாலுமகேந்திரா: பாலுமகேந்திரா ஒரு சைக்கோ. அதேபோல்தான் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாலாவும் ஒரு சைக்கோ. பாலுமகேந்திராவிடமிருந்து ஸ்ரீதேவியை கமல் ஹாசன் காப்பாற்றினார். பாலுவின் படத்தில் நடிக்கமாட்டேன் என்று ஸ்ரீதேவி கூறியும் வற்புறுத்தி நடிக்க வைத்தார் பாலுமகேந்திரா. பல முறை அவரிடமிருந்து காப்பாற்ற கமல் ஹாசன் போராடியிருக்கிறார்.
பாலியல் ரீதியான பயம்தான்: ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, ஷோபா, மோனிகா, ரெஸினா, ரேவதி போன்ற பெண்கள் பாலுமகேந்திராவின் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அதன் பிறகு அவருடன் நடிக்காமல் போனார்கள். அதற்கு பாலியல் ரீதியான பயம்தான் காரணம். தங்களது பெண்மையை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்" என்றார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. மேலும் இறந்து போன ஒருவர் குறித்து ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.