1000 பெண்கள் டார்கெட்... மலையாள நடிகரின் விவகாரமான வேலை...வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
29 May,2024
மலையாள சினிமாவில் டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் அந்த நடிகர். இவர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று தான் இருப்பார் என்பது மாலிவுட் சினிமா வட்டாரத்திற்கு தெரிந்த கதை தான் என்றாலும், தற்போது அந்த மாஸ் நடிகரின் மானம் அக்கட தேசத்திலும் போய் கொண்டு இருக்கிறது. மலையாள சினிமாவில் பிரபலமான இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த மாஸ் நடிகருக்கு வயது அறுபதை தொட்ட போதும், இப்போதும் மாஸ் ஹீரோவாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவரின் மாஸான நடிப்புக்கு மலையாள சினிமா மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவிலும் கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு காரணம், அண்மையில் இவர் ஸ்டார் நடிகரின் படத்தில் நடித்து பட்டையை கிளப்பி விட்டார். அந்த படத்தில் இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், இந்த இரண்டு காட்சியும் ஆட்டோ பாமாகவே வெடித்தது.
பெண்கள் விஷயத்தில் மோசம்: டாப் நடிகராக இவர் இருந்த போதும், பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று நடந்து கொள்வாராம். அண்மையில் இவர் வாரிசு நடிகரின் மகள் ஆடிய ஆட்டத்தை பார்த்து, அவரை அடைய நினைத்து ஒரு மோசமான செய்கை செய்து இருந்தார். அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் இணையத்தில் டிரெண்டாகி இவர் இமேஜை டேமேஜ் ஆக்கியது. இதையடுத்து, சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர், மலையாள நடிகர் பற்றி பல விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
1000 பெண்கள் டார்கெட்: அதில், அந்த மலையாள நடிகர் தனது டைரியில் 1000 பெண்களை அடைய வேண்டும் என்று டார்கெட் வைத்து இருக்கிறார். அதன் பொருள் ஒரு நாளைக்கு ஒரு பெண்கள் என்பது கணக்காம். மேலும், அவர் டைரியில், பெண்களின் பெயரை எழுதி அதை குறித்தும் வைத்துக்கொள்ளவாராம். அவரின் டார்கெட் நிறைவடைந்ததும் சக்ஸஸ் பார்ட்டி வைத்து கொண்டாடுவது நடிகரின் பழக்கமாம். சொகுசு பங்களா: அதே போல,
படப்பிடிப்பு தளத்தில் யார் வேண்டும் என்று, ஒரு சேர் போட்டு அமர்ந்து கொண்டு முடிவு செய்துவிட்டு, தயாரிப்பாளரிடமோ, தனது பிஏ விடமோ சொல்லிவிட்டு, பின் அந்த நடிகையுடன் அந்த மலையாள நடிகரும் சேர்த்து பேக்கப் ஆகிவிடுவாராம். இந்த கசமுசா ரகசியம் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, இதற்காக தனியார் பங்களா ஒன்றும் உள்ளது. இதனால், இந்த மலையாள நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்கவே பலரும் பயப்படுவார்கள் என்று அந்த சினிமா பத்திரிக்கையாளர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.