கமல் ஹாசனும் கௌதமியும் எதற்காக பிரிந்தார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் பலருள்ளும் இருந்தது. இதற்கான பதிலாக கௌதமி அளித்துள்ள பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
திரையுலகின் உலக நாயகனாக திகழ்பவர் கமல்ஹாசன். சிவாஜிக்கு அடுத்தப்படியாக திரையுலகினரால் கொண்டாடப்படுபவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் சிறப்பு வாய்ந்தவர்.
வாணி கணபதி, சரிகா உள்ளிட்டவர்களை திருமணம் செய்து அவர்களை விவகாரத்து செய்து பிரிந்தார். பின்னர் சமீப காலங்களில் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வந்தார்.
திடீரென அவர்கள் இருவரும் பிரிந்த நிலையில் அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்தச் சூழலில் பிரிவு தொடர்பாக கௌதமி அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமல்ஹாசனின் திரைப்பயணம் வருடங்களை கடந்தும் தொடர்கிறது. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசத்தை புகுத்தும் வல்லமை கொண்ட கமல்ஹாசன் உதவி நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். நடிப்பு, நடனம், இயக்கம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பு என சினிமா கிரவுண்டில் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர்.
நடிப்பில் திறமை வாய்ந்தவராக திகழ்ந்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். ஆனால் திரைத்துறையில் ஜொலித்தது போல் அரசியலில் அவரால் முழுவீச்சில் ஜொலிக்க முடியவில்லை.
எனவே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. அடுத்ததாக இந்தியன் 2 படமும் வெளியாகப்போகிறது.
கமல் ஹாசன் முதலில் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். அந்த உறவிலிருந்து வெளியேறினார்.
அடுத்ததாக சரிகாவை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். அந்த உறவும் பாதியில் முடிந்த நிலையில் கௌதமியுடன் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்தனர்.
கமல் ஹாசனும் கௌதமியும் எதற்காக பிரிந்தார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் பலருள்ளும் இருந்தது. இதற்கான பதிலாக கௌதமி அளித்துள்ள பேட்டி வெளியாகியுள்ளது.
அந்த பேட்டியில், “ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும்போது அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அதில் நீங்கள் நீடிக்க வேண்டும் என்ற தேவையில்லை. இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு போன்றவை ஒரே அளவாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் அது நீண்ட காலம் நீடிக்கும். எந்தவிதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதற்கென ஒரு மையப்புள்ளி இருக்கும். இருவரும் அந்த மையப்புள்ளியில் இருக்க வேண்டும். நான் இதை என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாடமாக கற்றுள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.