அட்ஜஸ்ட்மெண்ட் நடந்ததா இல்லையா?.. தயாரிப்பாளர் முன்பு ஓபனாக போட்டுடைத்த நடிகை.
25 May,2024
.
முஹவை ஜமீன் என்பவர் ஆங்காராம் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் மலையாள நடிகை டீனா என்பவர் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து நடிகை டீனா தயாரிப்பாளர் முன் வைத்து ஓபனாக பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு.
அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜஸ்ட்மெண்ட். அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவில் அறிமுகமாக வேண்டுமா, தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமா அதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தன்னுடன் படுக்கையை
பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சிலர் ஓபனாகவும், மறைமுகமாகவும் நடிகைகளிடம் அப்ரோச் செய்யும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலத்திலும் அந்த அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் ஓய்ந்தபாடில்லை என்பதுதான் கள எதார்த்தம். வாய் திறந்த நடிகைகள்: சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தங்களுக்கு
அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்தால் சைலெண்ட்டாக மறுத்துவிட்டு அதனை பொதுவெளியில் சொல்லாமல் இருந்தார்கள் நடிகைகள். இப்போது பலரும் அதுகுறித்து வெளிப்படையாக பேசிவருகிறார்கள். அது ஆரோக்கியமான விஷயமான ஒன்றகாவே பார்க்கப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோரும் தங்களுக்கு அட்ெஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்ததாக ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்புகூட நடிகை தேவி ப்ரியாவும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருந்தார். இந்தச் சூழலில் ஆங்காரம் என்ற படம் தமிழில் உருவாகியிருக்கிறது. இதில் மலையாள நடிகை டீனா முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். தமிழில் இது அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
டீனா ஓபன் டாக்: அப்போது பேசிய நடிகை டீனா, 'எனக்கு இந்தப் படத்தில் மரியாதை நன்றாகத்தான் இருந்தது. தவறாக எதுவும் நடக்கவில்லை. யாரும் இந்தப் படத்தில் எனக்கு பிரச்னை தரவில்லை. அதேபோல் யாராலும் எனக்கு பாலியல் தொல்லையும் தரப்படவில்லை. முக்கியமாக அட்ஜஸ்ட்மெண்ட் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் நான் இங்கு இருந்திருக்கமாட்டேன்' என்று தயாரிப்பாளரை மேடையில் வைத்துக்கொண்டே ஓபனாக பேசினார். இது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
மாறும் அடையாளம்: அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் மரியாதையே கொடுக்கப்படவில்லை என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார். அது பெரும் விவாதமானது. இப்போது மலையாள நடிகை ஒருவர் தமிழ் சினிமாவில் தனக்கு நல்ல மரியாதையை கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்று திரைத்துறையினர் மகிழ்ச்சியுடன் கூறிவருகிறார்கள்