அமிதாப் பச்சனைஉருவ ஒற்றுமை பிரபலமான நடிகர்... மாரடைப்பால் மரணம்!
24 May,2024
பாலிவுட்டின் ’பிக் பி’ என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவரைப் போலவே உருவ ஒற்றுமை கொண்டவர் நடிகர் ஃபிரோஸ் கான். இவர் அமிதாப்பை போல மிமிக்ரியும் செய்து பிரபலமானார். இவர் திடீர் மாரடைப்பால் காலமாகியிருப்பது பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
’பாபி ஜி கர் பர் ஹை’ உள்ளிட்ட பல சீரியல்கள், மேடை நாடகங்கள் மற்றும் படங்களில் நடித்தவர் நடிகர் ஃபிரோஸ் கான். இவர் நடிகர் அமிதாப் பச்சனைப் போல உருவ ஒற்றுமை கொண்டவர். மேலும், அவரைப் போலவே மிமிக்ரி செய்தும் பிரபலமானார். ஜூனியர் அமிதாப் பச்சன் எனச் செல்லப் பெயர் கொண்ட இவர் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று உத்தரபிரதேசத்தில் காலமானார்.
இந்த செய்தியை அவரது குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உறுதி செய்துள்ள நிலையில், திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.