தன்னைப்பற்றி வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் வீடியோவுக்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளைரயராஜா. 80-90களில் தனது இசையின் பல வெற்றிப்படங்களை கொடுத்த இளையராஜா, இன்றைய இசையமைப்பாளர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தொடங்கி இன்றைய இளம் நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் இவர், 80-வயதை கடந்தாலும், பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
இவரை பற்றி பல பாசிட்டீவான தகவல்கள் இருந்தாலும் அவ்வப்போது சில சர்ச்சைகளும் இவரை சுற்றி வருகிறது. குறிப்பாக பாடல் காப்புரிமை தொடர்பான இளையராஜா கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
தனது இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய பாடல்களை இசை நிகழ்ச்சியில் பாட கூடாது என்று கூறியது முதல், சமீபத்தில் வெளியான கூலி படத்தின் டீசரில் தனது இசையை பயன்படுத்தியதற்கு வழக்கு தொடர்ந்தது வரை இளைரயாஜா பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
அதிலும் சமீபத்தில் வைரமுத்து இசை பெரிதா மொழி பெரிதா என்று பேசியதும், அதற்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் பதிலடி கொடுத்ததும் வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு வகையில் இளையராஜா காப்புரிமை கேட்பது சரிதான் என்றும், மற்றொரு பக்கம், அவர் தாயாரிப்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டுதான் இசையமைத்தார்.
அவரின் இசையை தயாரிப்பாளர் வாங்கிக்கொண்டதால் முழு உரிமையும் அவருக்கு தான் உண்டு என்றும் கூறி வருகின்றனர்.
இதனிடையே தன்னை பற்றி வெளியாகும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இளையாராஜா வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன் வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள்.
ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை.. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை. என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை.
நான் என் வழியி் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன்.
இங்கு படங்களுக்கு இசையமைத்துக்கொண்டே இடையில் சில விழாக்களுக்கும் சென்று தலையை காட்டிவிட்டு, இதெல்லாம் நடந்துகொண்டிருந்தாலும் ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமா 4 மூமெண்ட் உள்ள சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற எனக்கு சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்.
படங்களுக்கு இசையமைப்பது வேறு. இந்த இசை சிம்பொனியில் தெரிந்தால் அது சிம்பொனியே இல்லை.
அதனால் அதை சுத்தமான சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்பதை என் ரசிகர்களுக்கு உற்சாகமாக தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.