பல பெண்களுடன் பழகினேன்ஸ மனைவிக்கு துரோகம் – ரகசியம் உடைத்த ரஜினிகாந்த்!
03 May,2024
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் நடித்து வருகிறார். இவருக்கு கிட்டத்தட்ட 73 வயது ஆகிவிட்டது. இருந்தபோதும் இளம் ரசிகைகளின் ஃபேவரைட் ஹீரோவாக நட்சத்திர நடிகராக அனைவரது மனதிலும் குடி புகுந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மனைவி லதா ரஜினிகாந்த் குறித்து பல விஷயங்களையும் தன் வாழ்வில் செய்த சில விஷயங்களை குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது எனக்கு மனைவியாக வரும் பெண் எப்படி இருக்க வேண்டும் என நான் சில கற்பனைகளை செய்து வைத்திருந்தேன்.
என்னுடன் பல அழகான நடிகைகள் நடித்திருக்கிறார்கள் சிலர் நெருக்கமாகவும் என்னுடன் பழகி இருக்கிறார்கள்.நானும் அவர்களுடன் நெருக்கமாக பழகினேன். ஆனால் எந்த ஒரு பெண்ணுக்கும் நான் சத்தியம் செய்து கொடுக்கவில்லை. யாரையும் ஏமாற்றமும் இல்லை. என் மனைவிக்கும் துரோகம் அதுபோன்று செய்ததில்லை.
ஒரு சமயத்தில் தில்லுமுல்லு படத்தின் சூட்டிங் போது கல்லூரி மாணவர்கள் பலர் என்னை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். அப்போதுதான் நான் லதாவை சந்தித்தேன். நான் எப்படி கற்பனை செய்து எனக்கு வருங்கால மனைவி வேண்டும் என நினைத்து வைத்திருந்தேனோ அதேபோன்று லதா இருந்ததை பார்த்து ஆச்சரியமடைந்து பெற்றோர்களின் சம்மதத்துடன் முறையாக அவரை திருமணம் செய்து கொண்டேன். தற்போதும் எங்களுக்குள் காதல் குறையாமல் இருக்கிறது என மனைவி மீது வைத்துள்ள காதலை கூறினார் ரஜினிகாந்த்.