'ஆனந்த ராகம்...', 'ஆகாய வெண்ணிலாவே...' போன்ற மனதுக்கினிய பாடல்களை பாடி பிரபலமான பின்னணி பாடகி உமா ரமணன் நேற்று (01) இரவு சென்னையில் தனது 69வது வயதில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று அவரது இல்லத்தில் காலமானதாக கூறப்படுகிது.
இவர், 'சப்தஸ்வரங்கள்' இசை நிகழ்ச்சி புகழ் ரவி ரமணனின் மனைவி ஆவார்.
உமா ரமணன் 'நிழல்கள்' திரைப்படத்தில் 'பூங்கதவ தாழ் திறவாய்...' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
இவர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி தற்போதைய வித்யாசாகர், மணி சர்மா வரையான இசையமைப்பாளர்களின் இசையில் மனம் நிறைந்த பாடல்களை பாடியுள்ளார்.
திரையிசையில் மட்டுமன்றி, கணவர் ரமணனுடன் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல்களை பாடியுள்ளார்.
பாடிய சில பாடல்கள்
நிழல்கள் - "பூங்கதவே தாழ் திறவாய்....."
பன்னீர் புஷ்பங்கள் - "ஆனந்த ராகம்...."
வால்டர் வெற்றிவேல் - "பூங்காற்று இங்கே வந்து..."
தூரல் நின்னுப்போச்சு - "பூபாலம் இசைக்கும்...."
மெல்ல பேசுங்கள் - "செவ்வந்தி பூக்களில்...."
பகவதிபுரம் ரயில்வே கேட் - "செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்ச...."
புதுமைப் பெண் - "கஸ்தூரி மானே கல்யாணத் தேனே...."
வைதேகி காத்திருந்தாள் - "மேகம் கருக்கையிலே...."
தென்றலே என்னை தொடு - "கண்மணி நீ வரக் காத்திருந்தேன்...."
ஒரு கைதியின் டயரி - "பொன் மானே கோபம் ஏனோ..."
கேளடி கண்மணி - "நீ பாதி நான் பாதி கண்ணே...."
அரங்கேற்ற வேளை - "ஆகாய வெண்ணிலாவே..."
மகாநதி - "ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் பாதம்...."
நந்தவன தேரு - "வெள்ளி நிலவே..."
ஆனழகன் - "பூச்சூடும் புன்னை வனமே...."
அரசியல் - "வா சகி வா சகி...."
திருப்பாச்சி - "கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு...."