கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான நெருங்கி வரும் சூழலில் அமெரிக்காவை சேர்ந்த சப்ஸ்கிரிப்ஷன் பாக்ஸ் நிறுவனம் 12 ஹால்மார்க் ஹாலிடே மூவிஸ்களை பார்த்து அவற்றை தரவரிசைப்படுத்தும் நபருக்கு 2000 அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பு படி 1,66,725 ) ரொக்க பணத்தை பரிசாக வழங்குவதாக அறிவித்து உள்ளது.
திரைப்படங்களைப் பார்த்து விமர்சிக்க அல்லது கருத்துக்களை கூற யாராவது பணம் கொடுப்பார்களா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா? என்றாலும் மேலே நீங்கள் படித்தது சரிதான். 12 ஹால்மார்க் கிறிஸ்துமஸ் திரைப்படங்களைப் பார்த்து அதனை விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் ரேங்கிங் செய்த இந்திய மதிப்பு படி சுமார் 1.66 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு ஆண்டுகளில் வெளியான 12 கிறிஸ்துமஸ் திரைப்படங்களை பார்த்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுகொண்டுள்ளது.
அமெரிக்க நிறுவனமான BloomsyBox இந்த சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த ஆஃபரை பெற விரும்புவோர் பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியலையும் நிறுவனம் வழங்கியுள்ளது. தேர்வாகும் விமர்சகர்கள் திரைப்படங்களை பார்ப்பதோடு இன்ஸ்டாவில் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த அதிர்ஷ்டசாலி ஒவ்வொரு படத்தையும் ஃபெஸ்ட்டிவிட்டி ஃபேக்டர், கெமிஸ்ட்ரி செக், எமோஷ்னல் இம்பேக்ட் மற்றும் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என தோன்றும் ஆசை போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் மதிப்பிட்டு தங்களது எண்ணங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்ய வேண்டும். இந்த வேலையில் ஈடுபடும் பண்டிகைக் கால திரைப்பட ஆர்வலருக்கு சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் மட்டுமல்ல 2000 டாலர் கேஷ் பிரைஸ் மற்றும் BloomsyBox-ற்கான 1 வருட கால சப்ஸ்கிரிப்ஷன், ஒரு ஜோடி snug chenille socks, ஆடம்பரமான Ghirardelli Premium Hot Cocoa உள்ளிட்டவற்றை பெறுவார் என்றும் நிறுவனம் அந்த போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளது.
ஃபைனல் போனஸாக போஸ்ட்-கிறிஸ்துமஸ் ப்ளூஸைத் தடுக்க, தனது வெற்றியாளருக்கு 12 மாத ஃபளவர் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குவதாக BloomsyBox கூறி இருக்கிறது. இந்த சப்ஸ்கிரிப்ஷன் 1 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பூங்கொத்து வீட்டு வாசலுக்கே சென்று வழங்கப்படுவதை உறுதி செய்யும் என நிறுவனம் கூறி இருக்கிறது. மேலும் இந்த போட்டி அமெரிக்காவில் வசிப்போருக்கு மட்டுமே, ஒருவர் டிசம்பர் 3 வரை இதில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
1. 2008 ஆம் ஆண்டு வெளியான The Most Wonderful Time of the Year
2. 2015 ஆம் ஆண்டு வெளியான Crown for Christmas
3. 2014 ஆம் ஆண்டு வெளியான The Nine Lives of Christmas
4. 2017-ல் வெளியான Christmas Getaway
5. 2016-ல் வெளியான Journey Back to Christmas
6. 2022-ல் வெளியான Ghosts of Christmas Always
7. 2015-ல் வெளியான Family for Christmas
8. 2014-ல் வெளியான Christmas Under Wraps
9. 2022-ல் வெளியான Three Wise Men and a Baby
10. 2014 ஆம் ஆண்டு வெளியான A Royal Christmas
11. 2014-ல் வெளியான Northpole
12. 2017-ல் வெளியான The Christmas Train