சென்னை காவல் நிலையத்தில் நேரில் ஆஜர்! நடிகர் மன்சூர் அலிகானிடம் தீவிர விசாரணை
23 Nov,2023
நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்காக அவர் தற்போது காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
நடிகை த்ரிஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதன்பேரில், மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் இன்று காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், தனக்கு தொண்டவலி ஏற்பட்டுள்ளதால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என ஆயிரம் விளக்கு மகளிர் போலீஸாருக்கு மன்சூர் அலிகான் கடிதம் அனுப்பினார். இதுமட்டுமல்லாது, நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கலும் செய்துள்ளார்.
தனக்கு தொண்டை வலி உள்ளதால் நாளை ஆஜராகிறேன் என மன்சூர் இன்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். மேலும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் மன்சூர் அலிகான். இதனால், கோபம் அடைந்த நீதிபதி அவரைக் கண்டித்தார். உடல்நிலையை பொருட்படுத்தாமல் நான் நேரில் ஆஜராகிறேன் என்று சொன்னபடியே ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார் மன்சூர் அலிகான். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.