பிரபல தமிழ் சினிமா இயக்குநர் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!
08 Nov,2023
நடன இயக்குநராக மட்டும் இருந்து வந்த ராகவா லாரன்ஸ், தற்போது ஹீரோ மற்றும் இயக்குநர் என கலக்கி வருகிறார். ஒரு காலத்தில் பாடல்களில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி விட்டுச் சென்றுகொண்டிருந்த லாரன்ஸ், தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆன படம் அற்புதம். குணால் உள்ளிட்டோர் நடித்த அப்படத்தை இயக்குநர் அற்புதன் இயக்கி இருந்தார்.
லாரன்ஸை அறிமுகம் செய்த, இயக்குநர் அற்புதன், அண்மையில் சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.