காதல் மன்னனாக திகழ்ந்த கமல்! முழு லிஸ்ட்!
07 Nov,2023
நடிகர் கமல்ஹாசன் இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடுவதை ஒட்டி, அவர் காதலித்த மற்றும் திருமண உறவில் இருந்த பெண்கள் குறித்து பார்க்கலாமா?
யுவஶ்ரீ
நடிகை ஸ்ரீதிவ்யா, கமலுடன் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இது குறித்து எங்குமே பேசவில்லை.
பரத நாட்டிய கலைஞர் வாணி கணபதியை கமல் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். காதலுடன் தொடங்கிய இவர்களின் திருமண வாழ்க்கை, 10 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்தில் முடிந்தது.
இந்தி நடிகை சரிகாவை கமல் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 16 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இவர்கள் 2004ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று கொண்டனர்.
சிம்ரனும் கமல்ஹாசனும் சில ஆண்டுகள் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. சிம்ரன் 22 வயது கமலை விட சிறியவர் என்பதால் இந்த உறவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பஞ்ச தந்திரம் பட ரிலீஸிற்கு பிறகு இந்த உறவு முறிந்ததாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன்-கௌதமி 2004ஆம் ஆண்டு முதல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இவர்களின் இந்த உறவு 2016ஆம் ஆண்டில் தங்களது உறவை முறித்துக்கொண்டனர்.