பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை வசைப்பாடி அடித்து விரட்டிய நடிகை.. வீடுதேடி சென்று. தூக்கிய போலீஸ்!
04 Nov,2023
.
சென்னை குன்றத்தூர் அருகே அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியப்படி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாயரை போலீசார் கைது செய்துள்ளனர்.
.
சென்னை அருகே குன்றத்தூர் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் மாணவர்கள் சிலர் படியில் தொடங்கியப்படியும், பேருந்து மேல் ஏறி தொங்கியப்படியும் சென்றனர். அப்போது அந்த வழியாக தவந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை வழிமறித்து நிறுத்தினார். ஓட்டுநரிடம் மாணவர்கள் இப்படி படியில் தொங்குகிறார்கள், பேருந்து மேல் ஏறுகிறார்கள், இதை ஏன் கண்டிக்கவில்லையா என கேட்டார்.
.
பின்னர் பின்படிக்கட்டு பக்கம் சென்ற ரஞ்சனா நாச்சியார், தரக்குறைவாக திட்டி, அடித்து கீழே இழுத்தார். மேலும் நடத்துநரையும் தரக்குறைவாக பேசினார். ரஞ்சனா நாச்சியாரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இதனை தொடர்ந்து அரசுப்பேருந்து ஓட்டுநர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் ரஞ்சனா மீது மாங்காடு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
.
.
இன்று காலை ரஞ்சனாவின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்வதாக கூறினர். அதற்கு வாரண்ட் உள்ளதா? எஃப்ஐஆர் காப்பி உள்ளதா என கேட்டு வாக்குவதத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னுடைய காரிலேயே வருகிறேன் என்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார் நடிகை ரஞ்சனா நாயர். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த போலீசார் ரஞ்சனா நாயரை தங்களின் வாகனத்திலேயே வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.
.
.
இந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே தனது வீட்டு படுக்கை அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது போலீஸ்காரர் ஒருவர், படுக்கையறையின் ஜன்னலை வந்து தட்டியதாகவும் நடிகை ரஞ்சனா நாயர் குற்றம் சாட்டியுள்ளார். ரஞ்சனா நாயரின் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்கவே இப்படி செய்துள்ளார் என கூறி வருகின்றனர்.
. மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்களை அடித்ததும், தரக்குறைவாக பேசியதும் தவறு, ஓட்டுநரையும் தகாத வார்த்தைகளால் பேசியது தவறு என்றும் கூறி வருகின்றனர். நடிகை ரஞ்சனா நாயர் பாஜகவில் பொறுப்பில் உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.