தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று போற்றப்படுபவர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விக்ரம் சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இன்றைய நடிகர்களுக்கும் தனது எழுத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்தபோது எம்.ஜி.ஆரின் அஸ்தான பாடல் ஆசிரியராக மாறியவர்.
எம்.ஜி.ஆருக்கு பல வெற்றிப்பாடல்களை கொடுத்த வாலி, கடைசி வரை முன்னணி கவிஞராக இருந்தாலும், அவருக்கு முதன் வாய்ப்பு சாதாரணமாக கிடைத்துவிடவில்லை.
சினிமாவில் கண்ணதாசனுக்கு எதிராக பாடல் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை வந்த வாலிக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பல இசையமைப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டுள்ளார்.
பாடல் ஆசிரியராக வாய்ப்பு தேடி சென்னை வருவதற்கு முன்பாக சங்கீத வித்வான் மதுரை சோமு மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த வாலி, அவரது கச்சேரி நடக்கும் இடங்களுக்கு சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
மேலும் வாலியுடன் அவரது நண்பர் விக்டரும் இணைந்து மதுரை சோமு திருச்சிக்கு வரும்போதெல்லாம், வாலிக்கு கடிதம் எழுத, வாலியும் தனது நண்பர் விக்டருடன் சேர்ந்து அவரை சென்று சந்திப்பார்.
சந்திப்பு முடிந்தவுடன் அவரின் கச்சேரி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் வாலியும் அவரது நண்பரும் கலந்துகொள்வார்கள்.
அதேபோல் வாலியின் பல பாடல்களை அந்த கச்சேரிகளில் பாடப்பட்டுள்ளது. இந்த தொடர்ந்து நாளைவில், நெருக்கமாக அவரிடம் தம்புரா வாசிக்கும் வேலையில் அமர்கிறார் வாலி. அப்படி ஒருநாள் திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் கச்சேரி நடந்துகொண்டிருந்தது.
விடிய விடிய நடந்துகொண்டிருந்த இந்த கச்சேரியில் அதிகாலை நேரத்தில் மதுரை சோமு இசையில் தீவிரமாக பாடிக்கொண்டிருந்தபோது தம்புரா வாசித்துக்கொண்டிருந்த வாலி தூக்கத்தில் அந்த அவரின் தோல்மீது சாய்ந்துள்ளார்.
இதனால் கடுப்பான மதுரை சோமு பாளார் என்று வாலியின் கண்ணத்தில் அறைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பபை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு மதுரை சோமுவை ஒரு வித்தியாசமான நிகழ்வில், சந்திக்கும் வாயப்பு வாலிக்கும் அவரது நண்பர் விக்டருக்கும் கிடைக்கிறது.
அப்போது சஷ்டி விரதம் என்ற படத்திற்காக ஒரு பாடல் பாட மதுரை சோமு அங்கு வந்திருக்கிறார். அந்த பாடலை எழுதியிருந்தவர் கவிஞர் வாலி. இந்த பாடல் பதிவின்போது வாலியை பார்த்த மதுரை சோமுக்கு கொஞ்சம் கூச்சமாகிவிட்டது.
அப்போது அவரது கையை பற்றிக்கொண்ட கவிஞர் வாலி, அண்ணே நீங்கள் சங்கீத சாகசம். நீங்கள் எங்கு பாடினாலும் உங்கள் பாட்டை கேட்ட லட்சக்கணக்கான பேர் கூடி வருவார்கள்.
அன்று நீங்கள் என் கண்ணத்தில் அடித்த அடிதான் இன்று என்னை சினிமா உலகில் இவ்வளவு பிரபலமாக வைத்துள்ளது என்று கூறி அவரின் காலில் விழுந்தார் வாலி.
இந்த சமப்வம் குறித்து வாலியே ஒரு புத்தக்த்தில் குறிப்பிட்டுள்ளார் என்று இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.