லியோ' படத்தில் நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம்.ஜனனி’அன்பெனும்’ பாடலில் .!
12 Oct,2023
’லியோ’ படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடித்திருப்பதைப் பார்த்துள்ள ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ’லியோ’ படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் நடித்திருப்பதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டபோது, அதுகுறித்து சீக்கிரம் உங்களுக்குத் தெரிய வரும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை படத்தில் இருந்து ‘அன்பெனும்’ மூன்றாம் பாடல் வெளியானது.
..
’அன்பெனும்’ பாடலில் ஜனனி...
இதில்தான், அந்த பிக் பாஸ் பிரபலத்தை ரசிகர்கள் கண்டறிந்து குஷியாகியுள்ளனர். கடந்த பிக் பாஸ் ஆறாவது சீசனில் இலங்கை செய்தி வாசிப்பாளராக உள்ளே நுழைந்தவர் ஜனனி. இவரைத்தான் ‘அன்பெனும்’ பாடலில் கண்டறிந்துள்ளனர் ரசிகர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகே ஜனனிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜனனி நடிகை த்ரிஷாவின் மிகப்பெரிய ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.