வசூலில் பட்டையை கிளப்பும் ஜவான்!ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ!
10 Sep,2023
ஷாருக் கான் மற்றும் அட்லீ கூட்டணி சேர்ந்து இருக்கும் ஜவான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. முதல் நாளில் 129.6 கோடி ருபாய் ஜவான் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இரண்டாம் நாள் வசூலை அறிவித்து உள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பில் ஜவான் படம் 240.47 கோடி ருபாய் வெறும் இரண்டே நாளில் வசூலித்து இருக்கிறது.
இதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ!
ஜெயிலர் அலை ஓய்ந்த நிலையில் இப்போது லியோ அலை அடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த வருடம் பெரிய நடிகர்களின் படங்களாக பார்க்கப்படுவது ஜெயிலர் மற்றும் லியோ தான். அந்த வகையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 600 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து விட்டது.
இந்நிலையில் ஜெயிலர் வசூலை லியோ படம் முறியடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சில ரஜினி ரசிகர்கள் லியோ படம் கண்டிப்பாக ஜெயிலர் வசூலை முறியடிக்க முடியாது என சவால் விட்டிருந்தனர். ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசுக்கு ஒன்பது நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டது.
அதன்படி டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் 1800 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. அதன் பிறகு படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததால் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதியது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் எதிர்பார்த்ததை விட வசூலை வாரி குவித்தது.
இதன் சந்தோஷத்தின் வெளிப்பாடாக கலாநிதி மாறனும் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக வழங்கியிருந்தார். இந்நிலையில் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் லியோ படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியாகிறது.
லியோ படத்தின் முன்பதிவு 42 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. அதுவும் குறைந்தது 5 மணி நேரத்திலேயே கிட்டதட்ட 2500 டிக்கெட்களுக்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டிக்கெட் முன்பதிவிலேயே இப்போது ஜெயிலர் சாதனையை லியோ முறியடித்து இருக்கிறது.
ஆகையால் கண்டிப்பாக லியோ படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் லியோ ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுகிறாரா என்பது லியோ படம் வெளியானால் தெரிந்துவிடும்.