நிர்வாணமாக நிற்க வைத்தார்! வீடியோ எடுத்தார்! ஆசைக்கு இணங்குமாறு மிரட்டினார்! போலீஸ் அதிகாரி மீது நடிகை ஸ்ருதி பரபரப்பு புகார்!
05 Aug,2023
.
போலீஸ் காவலில் இருந்த போது தன்னை நிர்வாணமாக நிற்க வைத்ததாகவும், நிர்வாண நிலையிலேயே வீடியோ எடுத்ததாகவும், மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறும் போலீஸ் அதிகாரி தன்னை மிரட்டியதாக கண்ணீர் விட்டு கதறியபடி நடிகை ஸ்ருதி புகார் அளித்துள்ளார். மாட்ரிமானியல் மூலம் பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஸ்ருதி கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட் நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தனக்கு கோவையை சேர்ந்த காவல் உயர் அதிகாரி ஒருவர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். .
விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி தன்னை போலீஸ் காவலில் சைபர் கிரைம் போலீசார் எடுத்ததாக கூறியுள்ளார். மொத்தமாக ஏழு நாட்கள் என்னை காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கிடைத்தது. ஆனால் என்னிடம் ஒரு நாள் கூட விசாரிக்கவில்லை. காவலில் எடுக்கப்பட்ட முதல் நாளிலேயே என் ஆடைகளை கலைந்து நிர்வாணமாக்கினார்கள். மேலும் என்னை கோவையை சேர்ந்த காவல் உதவி ஆணையர் ஒருவரின் ஆசைக்கு இணங்க வலியுறுத்தினர். நான் ஒப்புக் கொள்ளவில்லை. .
இதனால் என்னை நிர்வாணமா கநிற்க வைத்து நான் கதறி அழுத நிலையிலும் வீடியோ, புகைப்படம் எடுத்தனர். இதன் பிறகு அந்த உதவி ஆணையர் என்னிடம் நேரடியாகவே வந்து என்னுடன் படுக்க வேண்டும் என்று மிரட்டினார். அதற்கு முடியவே முடியாது ஒரு முறையாவது உன்னை அனுபவிக்க வேண்டும் என்று அந்த உதவி ஆணையர் கூறினார். நான் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், ஆனால் என்னை தொடக்கூடாது என்று கூறினேன். .
ஆனால் அந்த உதவி ஆணையர் தொடர்ந்து என்னை மிரட்டினார். என்னை தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறிய போதும் என்னை விடவில்லை. ஒரு கட்டத்தில் நிர்வாணமா நிற்க வைத்து என்னை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். எனக்கு நேர்ந்த கொடுமைகயை நான் நீதிபதியிடம் முறையிட்டேன். ஆனால் அதன் பின்னரும் அந்த உதவி ஆணையர் என்னை விடவில்லை. சிறைக்காவலுக்கு சென்று பிறகு தான் நான் தப்பித்தேன். அந்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை ஸ்ருதி கூறினார்.