. தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா?
31 Jul,2023
.
தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதல் 5 இடத்தில் விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற தமிழ் திரையுலக பிரபலங்கள் யாருமே இடம்பெறவில்லை.
.
சினிமா பிரபலங்களுக்கு சமீப காலமாக சம்பளம் வாரி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய், ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். இவர்களுக்கு இணையாக தெலுங்கு நடிகர் பிரபாஸ் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வாங்கிறார். மற்றபடி தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகரும் இந்த அளவுக்கு சம்பளம் வாங்கவில்லை. அப்படி இருந்தும், தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் மேற்கண்ட 4 நடிகர்களும் டாப் 5 இடத்தை கூட பிடிக்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை.
இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் பெரும் பணக்காரராக திகழ்ந்து வரும் நடிகர் என்றால் அது நாகார்ஜுனா தான். அவரின் சொத்து மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடியாம். இவர் ஒரு படத்திற்கு ரூ.20 கோடி மட்டுமே சம்பளமாக வாங்குகிறார். அதேபோல் விளம்பரங்களுக்கு ரூ.2 கோடி வாங்குகிறார். அப்புறம் எப்படி இம்புட்டு சொத்து என்று தானே ஆச்சர்யப்படுகிறீர்கள். அவருக்கு சினிமா வெறும் சைடு பிசினஸ் தானாம். அவருக்கு இம்புட்டு சொத்து மதிப்பு எகிற காரணம் அவர் செய்யும் தொழில்கள் தான்.
திறமையான தொழிலதிபராக திகழ்ந்து வருவதால் தான் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்து வருகிறார் நாகார்ஜுனா. அன்னப்பூர்ணா பிலிம் ஸ்டூடியோவில் பார்ட்னர், ஐதராபாத்தில் மீடியா ஸ்கூல், கன்வென்ஷன் செண்டர், டிவி சேனல் என பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ளதன் மூலம் தான் அவருக்கு இவ்ளோ சொத்து மதிப்பு உள்ளது.
நாகார்ஜுனாவுக்கு அடுத்தபடியாக பணக்கார நடிகர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளவர் வெங்கடேஷ். இவரும் தெலுங்கு நடிகர் தான். இவரின் சொத்து மதிப்பு ரூ.2200 கோடியாம். இதற்கு அடுத்தபடியாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி ரூ.1650 கோடி சொத்துடன் மூன்றாவது இடத்திலும், அவரின் மகன் ராம்சரண் ரூ.1370 கோடி சொத்துடன் நான்காம் இடத்திலும் உள்ளார். இதற்கு அடுத்தபடியாக ஜூனியர் என்.டி.ஆர் ரூ.450 கோடி சொத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
இப்படி டாப் 5 இடங்களையும் தெலுங்கு நடிகர்கள் தான் ஆக்கிரமித்து உள்ளனர். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகரான விஜய் ரூ.445 கோடி சொத்து மதிப்புடன் 6-வது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரஜினிகாந்த் ரூ.430 கோடி சொத்துடன் 7-ம் இடம் பிடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் ரூ.388 கோடி சொத்துடன் 10-வது இடத்தில் உள்ளனர். மோகன்லால் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் 8 மற்றும் 9-வது இடத்தில் உள்ளனர்.