சீரியலையே மிஞ்சும் அளவுக்கு... நிஜ வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் மாரிமுத்துவுக்கு வந்த சிக்கல்
30 Jul,2023
எதிர்நீச்சல் தொடரில் நடித்து பிரபலமான மாரிமுத்து அண்மையில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் ஜோதிடர்களை சரமாரியாக விமர்சித்து பேசி இருந்தார். அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி, விவாத பொருளாகவும் மாறியது. இந்நிலையில், தற்போது அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க மாவட்ட ஓருங்கினைப்பாளர் பழ.ஆறுமுகம் என்பவர் தான் இந்த வக்கீல் நோட்டீஸை அனுப்பி இருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : “கடந்த 23.07.2023 தேதி அன்று பிரபல ஜி தமிழ் தொலைக்காட்சியில் பகல் 12 மணியளவில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடம் பற்றிய கருத்து நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள ஜோதிடர்கள், நடிகர் மாரிமுத்து, நடிகைகள் அர்ச்சனா மற்றும் நளினி மற்றும் ஜோதிடம் எதிர் கருத்து உடையவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.
ஜோதிடம் என்பது இந்து மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்து மதத்தின் நம்பிக்கை உள்ள மக்களுக்கு எதிராகவும், பண்டைய காலம் முதல் இன்று வரை ஜோதிட பழக்க வழக்க முறைகளுக்கும் மற்றும் இதன் மேல் நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிராகவும் G.மாரிமுத்து பேசியுள்ளார். மேற்படி நிகழ்ச்சின் இடையில் மாரிமுத்து அவர்கள் ஜோதிட தொழிலை அவதூறு பரப்ப வேண்டும் என்ற கெட்ட என்னத்திலும் கருத்து உரிமை உள்ளது என்பதை பயன்படுத்தி சபை நாகரிகம் மீறி ஜோதிடர்களை பார்த்து ஒருமையில் பேசி ஜோதிடர்கள் அனைவரும் மன்னிக்க முடியாத குற்றவாளி என்றும் ஜோதிடர்கள் தான் இந்தியாவை பின்னோக்கி இழுத்து செல்வதற்க்கு முக்கியாமான காரணம் என்றும் உன்மைக்கு புறம்பாக பொய்யான குற்றசாட்டுகளை ஆதாரம் இன்றி பேசியதை தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்த்து அதிர்ந்து போனேன்.
மாரிமுத்து, ஜோதிடத்தை பற்றி பொய்யான குற்றசாட்டுகளை ஆதாரம் இன்றி பேசியதால் மனம் புன்பட்டுள்ளது. இதனால் மாரிமுத்து அவர்களின் அவதூறு பேச்சு காலம் காலமாக பின்பற்றி வரும் ஜோதிட ஆராச்சிகள் மற்றும் ஜோதிட நம்பிக்கைக்கு எதிராகவும் ஜோதிடர்கள் இந்தநாட்டின் வாழ தகுதியற்றவர்கள் என்பது போல் தீய என்னத்திலும் அவதூறு பரப்பி பேசியது மக்கள் மத்தியில் ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தின் மேல் உள்ள நம்பிக்கை நீர்த்து போகும் அளவிற்கு அவர் பேசி உள்ளார்.
நாங்கள் தலைமுறை தலைமுறையாக ஜோதிடத்தை குல தொழிலாக செய்து வருகிறோம். சமுதாயத்தில் எங்கள் மீது உள்ள நற்பெயருக்கும் மற்றும் சங்க உறுப்பினர்களின் நற்பெயர்க்கு களங்கம் விளவிக்கும் வகையில் மாரிமுத்துவின் பேச்சு அமைந்துள்ளது. இதானல் பல்லாயிரக்கணக்கான வள்ளுவ குல மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கபட்டுள்ளது.
எனவே இந்த நோட்டிஸ் கண்ட 15 தினங்களுக்குள் ஜி தமிழ் தனியார் தொலைக்காட்சியில் அவதூறு பேசியது குறித்து மாரிமுத்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர். எதிர்நீச்சல் சீரியலில் தற்போது கை, கால் செயல்படாமல் படுத்த படுக்கையாக இருக்கும் மாரிமுத்துவுக்கு தற்போது நிஜ வாழ்க்கையிலும் இப்படி ஒரு சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.