எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்படுவதற்கான 5 முக்கிய காரணங்கள் இவை தான்!
பட வாய்ப்புக்காக பிரபல நடிகையை படுக்கறைக்கு அழைத்த இயக்குநர்..!
மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று பாலிவுட்டில் பிரபல நடிகைகளுள் ஒருவராக விளங்குபவர் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. இவர் பட வாய்புக்காக ஒரு இயக்குநரை சந்தித்த போது அவர் தன்னை அவருடைய படுக்கயறைக்கு அழைத்ததாக கூறி குற்றம் சாட்டியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகம் மட்டுமன்றி உலகெங்கிலும் பெரும் பிரச்சனையாக தலையெடுத்த விவகாரம், “மீ டூ”. தமிழ்நாட்டில் இது பெரிதும் பேசப்பட காரணமாக இருந்தவர் பாடகி சின்மயி. தன்னை வைரமுத்து பாலியல் சீண்டல் செய்ததாக கூறி குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தலை தூக்க, பலர் தாங்களும் இது போல பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் அல்லது அது தொடர்பான பிரச்சனைகளை உலகிற்கு எடுத்துக்கூற பயன்படுத்திய ஆயுதம்தான், மீ டூ. குறிப்பாக திரையுலகில் இந்த பிரச்சனை இருந்து வருவதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த வகையில் இன்னொரு நடிகையும் ஒரு பிரபல இயக்குநர் குறித்து பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
பாலிவுட்டில் பிரபலமான நடிகர்களாக உள்ள ஷாருக்கான், அனில் கபூர் உள்ளிட்ட பலருடன் படங்களில் சேர்ந்து நடித்துள்ளவர் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. இவர், சில தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார். இவர், தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் முகம் காட்டி வருகிறார். தனது நேர்காணல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பேசுவது மூலம் இவர் வைரலாவது வழக்கம். அப்படி இவர் பேசிய ஒரு செய்தி தற்போது சினிமா பக்கத்தின் தலையங்கமாக மாறியுள்ளது.
.
தான் படங்களில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்தில் சுசித்ரா நினைவு கூர்ந்துள்ளார். தான், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பதற்காக ஒரு இயக்குநரை பார்க்க அவர் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். படத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஹாேட்டலில் சந்திப்பது அப்போது சகஜம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அந்த இயக்குநர் தன்னிடம் ‘நீ அம்மாவுடன் நெருக்கமாக இருப்பாயா அல்லது அப்பாவுடன் நெருக்கமாக இருப்பாயா..’ என கேட்டதாகவும் அதற்கு இவர் ‘நான் அப்பாவுடன் நெருக்கமாக இருப்பேன்’ என கூறியதாகவும் பேசியுள்ளார். பின்னர், அந்த இயக்குநர் ‘அப்போ சரி, உன் அப்பாவிற்கு போன் செய்து நாளை காலை உன்னை வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று சொல்’ எனக்கூறியுள்ளார்.
“ஓடி வந்துவிட்டேன்..”
அந்த இயக்குநர் தன்னிடம் என்ன கூறினார் என்பது தனக்கு புரிவதற்கு சற்று நேரம் பிடித்ததாகவும் பின்னர் அவரது எண்ணம் தனக்கு புரிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். வெளியில் சென்று எதையோ எடுத்து வருகிறேன் என கூறிய அவர் அப்படியே ஓடி வந்துவிட்டதாகவும் தன் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
பலருக்கு நேர்ந்துள்ளது..
தன் அனுபவம் குறித்து பேசியுள்ள நடிகை சுசித்ரா, இது போல பலருக்கு நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நடிப்பதற்காக அழைத்து விட்டு இது போன்று பெண்களை பயன்படுத்தி கொள்வோர் அப்போது நிறைய பேர் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிப்பதை நிறுத்திய நடிகை..
நடிகை சுசித்ரா, பிரபல இயக்குநர் சேகர் கபூரை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரது அம்மா-அப்பா எவ்வளவோ கூறியும், தான் அந்த திருமணத்தை செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். அந்த திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட அவர் சமீப காலமாகத்தான் சீரியல்களில் நடித்து வருகிறார். சேகர்கபூரை 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார்.