பிரபல திரைப்பட தயாரிப்பாளர் உயிரிழப்பு..! முதல்வர் உள்பட பலர் இரங்கல்ஸ!
10 Jul,2023
மலையாள சினிமாவின் பிரபல தயாரிபாளராக விளங்கியவர், கே. ரவீந்திரநாத் நாயர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் ‘அச்சானி ரவி’ என்று அன்போடு அழைக்கப்படுபவர். இவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் வசித்து வந்தவர் அச்சானி ரவி. 1970களில் இவர் தயாரித்த பல படங்கள் பல நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அதிலும் முக்கியமாக 1973ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சானி’ எனும் திரைப்படத்தை இவர் தயாரித்திருந்தார். அந்த படம், ரசிகர்கள் இடையே பலத்த வரவேற்பு பெற்றதாலும் இன்றளவும் பலரால் பாரட்டப்படுவதாலும், அதை தயாரித்த கே. ரவீந்திரநாத் நாயர், ‘அச்சானி ரவி’ என அழைக்கப்படுகிறார்.
.
உயிரிழப்பு:
கொல்லம் பகுதியில் உள்ள சொந்த ஊரில் அச்சானி ரவி, தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். இவரது மனைவியும் பாடகியுமான உஷா ரவி, 2013ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பிறகு, தனது மூன்று பிள்ளைகளான பிரதாப் நாயர், பிரகாஷ் நாயர், பிரீத்தா நாயர் ஆகியோருடன் இருந்தார், அச்சானி ரவி. தற்போது 90 வயது நிரம்பிய நிலையில் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
கேரள முதலமைச்சர் பிரணாயி விஜயன், அச்சானி ரவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் மட்டுமன்றி, பல கேரள திரைப்பிரபலங்களும் இயக்குநர்களும் அச்சானி ரவி தயாரித்த படங்கள் குறித்தும் அவர் பிறரிடம் பழகிய விதங்கள் குறித்தும் நினைவு கூர்ந்து வந்தனர்.
அச்சானி ரவி தயாரித்த படங்கள்:
1973ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அச்சானி திரைப்படம், இப்படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பயன்கர தாக்கத்தை ஏற்படுத்திய படமாக உள்ளது. 1994ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த விதேயன் என்ற படம், ரசிகர்களின் பலத்த வரவேற்பினை பெற்றிருந்தது. இந்த படத்தை அச்சானி ரவிதான் தயாரித்திருந்தார். அது மட்டுமன்றி எஸ்தப்பன், காஞ்சனா சீதா, மஞ்சு போன்ற பல படங்களை தயாரித்து பிரபலமானார். இவர் தயாரித்துள்ள பல படங்கள் பல விருதுகளை பெற்றுள்ளன.