தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நயன்தாரா!
08 Jul,2023
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு முன்பு சினிமாவில் கொடிகட்டி பறந்தார். கல்யாணத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே தொடர் தோல்வியை தழுவி வருகிறது. இந்த சூழலில் நயன்தாரா பெரிதும் நம்பி இருக்கும் படம் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் தான்.
பாலிவுட்டில் ஒரு ஹிட் கொடுத்து விட்டால் மீண்டும் விட்ட மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் நயன்தாரா இருக்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு விடாமுயற்சி படம் கைநழுவி போன நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
மேலும் கமல் இந்த படத்தை தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருக்கிறது. இந்த சூழலில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவன் இப்போது கதாநாயகியை மாற்றிவிட்டாராம்.
அதாவது நயன்தாராவுக்கு பதிலாக பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஜான்வி கபூர் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலக ஒரு காரணம் கூறப்படுகிறது.
அதாவது அஜித் நிராகரித்த காரணத்தினால் ஒரு மாபெரும் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் விக்னேஷ் சிவன் செயல் பட்டு கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது நயன்தாராவுக்கு நேரம் சரியில்லாத காரணத்தினால் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். இந்த நேரத்தில் இந்த படமும் ஃப்ளாப் ஆகிவிட்டால் விக்னேஷ் சிவன் கேரியர் கேள்விக்குறியாகி விடும்.
இதனால்தான் இப்போது நயன்தாராவுக்கு பதிலாக ஜான்வி கபூரை விக்னேஷ் சிவன் தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் ஸ்ரீதேவி போல் தமிழ் சினிமாவில் ஜான்வி கபூரும் ஒரு ரவுண்டு வருகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.