சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கம் அவர்களுக்கு ரெட் கார்டு விதித்து விட்டால் அவர்களின் சினிமா சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துவிடும்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகியோருக்கு ரெட் கார்டு விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கம் அவர்களுக்கு ரெட் கார்டு விதித்து விட்டால் அவர்களின் சினிமா சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துவிடும். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை சொல்லலாம்.
இம்சை அரசன் படத்தின் பிரச்சனை காரணமாக ரெட் கார்டு விதிக்கப்பட்ட வடிவேலு சில ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தார்.
இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் அழியாத ஒரு கரும்புள்ளியாக மாறியுள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரிய கரும்புள்ளி உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் சம்பளம் பெற்று விட்டு தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடிக்கும் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரெட் கார்டுக்கான முதற்கட்ட நடிகர்கள் பட்டியலில், விஷால், சிம்பு, சூர்யா, எஸ்.ஜே.சூர்யா, அதர்வா யோகிபாபு உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க தயாராகி வரும் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேசன் புகார் அளித்துள்ளார்.
அதேபோல் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா எஸ்.ஜே.சூர்யா மீதும், விஷால் மீது கே.பி.பிலிம்ஸ் பாலுவும், அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகனும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு மீது பல தயாரிப்பாளர்கள் கால்ஷீட் தொடர்பாக புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து சில நடிகர்களுக்கு நடிகர் சங்கத்திடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்கம் அளிக்கும் பதிலை வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விஷால் தலைமையில் செயல்பட்ட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பல நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.