வாணி ஜெயராமின் நேற்று வெளியாகிய பிரேத பரிசோதனை அறிக்கைஸ திரையுலகத்தினர் மீண்டும் அதிர்ச்சியில்!!
08 Feb,2023
இந்தியாவில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த பின்னணி பாடகராகத் திகழ்ந்து வந்தவர் வாணி ஜெயராம் இவர் 19 க்கும் மேற்பட்ட மொழிகளில் பல பாடல்களைக் பாடி அசத்தியிருக்கின்றார். இவரின் காந்தக் குரலிற்கு மயங்காத ரசிகர்களே கிடையாது அத்துடன் பல விருதுகளுக்குச் சொந்தக் காரரான இவர் மூன்று முறை தேசிய விருதினையும், கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இந்திய அரசினால் வழங்கப்படும் அதியுயர் விருதான பத்ம பூஷன் விருதினையும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் தற்போது 78 வயதாகும் இவர் நேற்று முன்தினம் தலையில் பலத்த காயங்களுடன் அடிபட்ட நிலையில் தனது வீட்டில் இறந்து கிடந்தமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனையடுத்து பெறப்பட்ட சாட்சிகளுக்கு அமைவாக இவருடைய மரணமானது இயற்கைக்கு மாறானது எனத் தெரிவித்த பொலிஸார் விசாரணையினை ஆரம்பித்திருந்தனர். இவருடைய மரணத்திற்கு இந்தியாவின் அனைத்து அரசியல் வாதிகளும், சினிமாப் பிரபல்யங்களும் இரங்கள் தெரிவித்து வந்த நிலையில், இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியாகியது. இதில் பாடகி வாணி ஜெயராம் வீட்டில் தனியாக இருக்கும்போது படுக்கையறையில் இருந்த 02 அடி உயரமுள்ள பழமையான மேசையின் மேல் விழுந்ததனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, வைத்தியர்களின் திடுக்கிடும் இந்தச் செய்தியினால் திரையுலகத்தினரை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.