சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜனிக்கு மட்டும் தான் விஜய்க்கு அல்ல பயில்வான்ஸ
22 Jan,2023
நெடுமி என்ற படத்தை, ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இது பனைமரம் ஏறுபவர்கள் தொடர்பான ஒரு படம். இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதனை அழைத்து இருந்தார்கள். பயில்வானை அழைத்தால் போதும்ஸ ஏதாவது ஏடாகூடமான பேச்சைப் பேசிஸ விழாவையே ட்ரென்டாக்கி விடுவார். இதற்காக இவருக்குப் பல லட்சங்களை வழங்கி, சிலர் கூட்டிவந்து பேச விடுகிறார்கள். வாங்கிய காசுக்கு வேலை செய்வதில் பயில்வானுக்கு நிகர் பயில்வான் தான்ஸ அங்கே..
பேசிய பயில்வான், நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி, காதல் இளவரசன் என்றால் அது கமல், மக்கள் திலகம் என்றால் MGR. அதுபோல சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான். அவருக்குத் தான் இந்தப் பட்டம். இதனை ஏன் நீங்கள் எடுத்து வேறு ஒருவருக்குக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அவர் கேட்டது விஜய்யைப் பற்றித்தான். உலக அறிவு எதுவும் இல்லாமல், வெறும் யூரியூபில், கிளுகிளுப்பாகப் பேசி, முன்னர் தான் கண்ட காட்சிகளைப் பற்றிப் பேசி பணத்தைச் சம்பாதித்து வாழ்கையை ஓட்டி வருபவர் இந்த பயில்வான்.
இவருக்குச் சர்வதேச திரைப்படங்கள் பற்றியோ.. இல்லை உலக அறிவு என்பது சற்றும் கிடையாது. கிணற்றுத் தவளை போல இவர் இருக்கிறார். சூப்பர் ஸ்டார் என்பது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சினிமா துறையில் உச்சத்தில் உள்ள நடிகர்களைக் குறிக்கும் சொல். அது ஒரு நடிகரை அல்லது நடிகையைக் குறிக்கும் சொல் அல்ல. என்பதே பயில்வானுக்குத் தெரியாது. இந்த நிலையில். ஏதாவது இடக்கு முடக்காகப் பேசி, “”நெடுமி””” படம் தொடர்பாகக் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்று தான் வாங்கிய காசுக்காகப் பேசியுள்ளார் பயில்வான்.
இதனால் இவர் நினைத்த அளவுக்கு விஜய் ரசிகர்கள் ஒன்றும் பொங்கி எழுந்துவிடவில்லை. நாய் சந்திரனைப் பார்த்துக் குரைத்தால் சந்திரன் என்ன மறைந்துவிடுமா என்று கண்டுகொள்ளாமலே விட்டு விட்டார்கள் விஜய் ரசிகர்கள்.