ஜனனியை தொடர்ந்து மற்றுமொரு பிக்பாஸ் போட்டியாளருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
20 Jan,2023
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் வெற்றிகரமாக ஓடி முடிந்த நிலையில் தற்போது 6 சீசன் ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு 6 பேர் தகுதிப் பெற்ற நிலையில் கதிர் மட்டும் பண மூட்டையுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறினார்.
இதனையடுத்து விக்ரமன், அசீம், ஷிவ்ன், அமுதா, மைனா என 5 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் பயணித்து வருகின்றனர்.
அதேவேளை பிக்பாஸ் இறுதி வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்திருந்தனர்.
அப்போது சில சுவாரஸ்யமான சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அரங்கேறின. மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு இறுதியாகவே ஆயிஷாவும் ரச்சிதாவும் வந்திருந்தார்.
உள்ளே வந்த ஆயிஷா நான் வெள்ளித்திரையில் பட வாய்ப்பினைப் பெற்று நடித்து வருவதாகவும் அதனால் தான் உள்ளே வர தாமதம் ஆகி விட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஜனனி தளபதி 67 படத்தில் நடிப்பதையும் ஆயிஷா ஷிவினிடம் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.