வெண்ணிலா கபடி குழு பட நடிகர் மரணம் திரைத்துறையினர் இரங்கல்..!
24 Dec,2022
தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் மாயி சுந்தர் அறிமுகமானர். இதனையடுத்து, சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும், கட்டாகுஸ்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
வெண்ணிலா கபடிக் குழு, மாயி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த மாயி சுந்தர் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகர் மாயி சுந்தர் அறிமுகமானர். இதனையடுத்து, சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும், கட்டாகுஸ்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு மாயி சுந்தர் வந்துள்ளார். இதையடுத்து தனது சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு மாயி சுந்தர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரைவுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.