விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழக்கை வரலாற்று படமான மேதகு படத்தின் இயக்குனர் தி.கிட்டு அப்படத்தின் எடிட்டர் சி.மு.இளங்கோவன் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் சல்லியர்கள்.
ஈழப்போரை கண்முன் நிறுத்தும் சல்லியர்கள் : எடிட்டர் சிமு. இளங்கோவன் கூறுவது என்ன?
இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் போரை பற்றி பேசினால் அதில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி பேசாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் தலைவராக இருந்த பிரபாகரன் தனது வாழ்நாள் முழுவதும் தனது மக்களுக்காகவே வாழ்ந்து உயிரை விட்டவர்.
அவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தமிழில் வெளியான முதல் படம் மேதகு. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக தடம் பதித்தவர் தி.கிட்டு
அதேபோல் மேதகு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எடிட்டராக அறிமுகமானவர் சிமு.இளங்கோவன். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த இவர், தமிழ் சினிமாவின் பல படங்களில் உதவி மற்றும் அசோசியேட் எடிட்டரா பணியாற்றிய நிலையில், மேதகு படத்தின் மூலம் எடிட்டராக அறிமுகமாகியுள்ளார்.
தற்போது மேதகு கூட்டணியான இயக்குனர் தி.கிட்டு மற்றும் எடிட்டர் இளங்கோவன் கூட்டணியில் தற்போது சல்லியர்கள் என்ற படம் தயாராகியுள்ளது. இலங்கை போரில் மருத்துவர்களின் செயல்பாடு தொடர்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் நடிகர் கருணாஸ் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்நிலையில் மேதகு, சல்லியர்கள் படம் குறித்து எடிட்டர் இளங்கோவனை தொடர்பு கொண்டோம்.
பலூன் படத்தில் அசோசியோட் எடிட்டராக வொர்க் பண்ணும்போது நண்பர் ஒருவரின் மூலம் இயக்குனர் கிட்டுவின் அறிமுகம் கிடைத்தது. அவர் என்னிடம் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை குறித்து படம் எடுக்க போவதாகவும், அதை எடிட் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேதகு பிரபாகரன் படம் என்றதுமே அடுத்த வார்த்தை பேசாமல் ஓகே சொல்லிவிட்டேன். அடுத்து ஓரிரு நாட்களில் மேதகு படம் தொடங்கப்பட்டது. மேதகு படத்தில் வொர்க் பிடித்திருந்ததால் சல்லியர்கள் படத்திற்கும் நாங்கள் இணைந்துள்ளோம்.
இந்த இரண்டு படங்களுமே ஈழம் தொடர்பான கதைகளம் தான். ஆனால் மேதகு படம் ஷூட்டிங்கின்போது பெரிய பிரச்சினை இருந்தது. மேதகு பிரபாகரன் வாழ்ககை வரலாறு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கண்டன்ட் தமிழக அரசாலும் தடை செய்யப்பட்டது என்பதால் எங்களுக்கு எங்கு சென்றாலும் பிரச்சினை இருந்தது.
படத்தின் ஷூட்டிங்கிற்காக எங்க போய் கேமரா வச்சாலும் உடனடியாக போலீஸ் வந்துடுவாங்க. ஒரு சில இடங்களில் மட்டும் இல்ல எல்லா இடங்களிலும் இதே நிலைதான். ஷூட்டிங்கிற்கு மட்டும் அல்ல ஒரு பிரஸ் மீட் வைத்தாலும் கூட அதற்கும் பிரச்சினைதான். பாடல் வெளியீட்டுக்கு கூட பிரச்சினை வந்தது. இதனால் மேதகு படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியும் சென்னையில் நடத்தாமல் தஞ்சையில் நடத்தினோம். அங்கேயும் போலீஸ் பிரச்சினை இருந்ததது. அந்த பிரச்சினைகள் எல்லாம் சரி செய்து எந்த விதமான அறிவிப்பும் இல்லாமல் மேதகு படம் ஒடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
ஆனால் சல்லியர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் எதுவும் இல்லை. இந்த படம் தொடர்பான அனைத்திற்கும் சரியான அனுமதி பெறப்பட்டு ஷூட் செய்யப்பட்டது. தயாரிப்பாளர் கருணாஸ் அனைத்தையும் சரியாக அனுமதி வாங்கி செய்தார். மேதகு க்ரௌடு பண்டிங் முறையில் செய்ததால் தயாரிப்பு தரப்பில் இருந்து சப்போர்ட் எதுவும் கிடைக்வில்லை. இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தற்போது சல்லியர்களுக்கு அதுபோன்று இந்த பிரச்சினையும் இல்லை. மேதகு படம் போன்று சல்லியர்கள் படத்தில் வொர்க் பண்ணுவதும் .ஃகம்படபுளாக உள்ளது அதேபோல் படத்தின் இயக்குனர் கிட்டு எந்த கண்டென்ட் எடுத்தாலும் அது தொடர்பாக நிறைய ரிசர்ச் செய்வார். ஆனால் இலங்கை போர் குறித்து எவ்விதம தகவலும் நெட்டில் இருக்காது ஒரு சில புகைப்படங்கள் இருந்தாலும் அரிதுதான். புத்தகங்களில் படித்ததை வைத்து விஷூவலைஸ் செய்துதான் இந்த படத்தை எடுத்தார். இதனால் அவருடன் வொர்க் பண்ணுவது எனக்கு ஃகம்படபுளாக உள்ளது.
ராணுவத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு பிரிவுக்கு பெயர்தான் சல்லியர்கள். 800 ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் காலத்தில் இருந்தே இந்த சல்லியர்கள் என்ற பெயர் நடைமுறையில் உள்ளது. போரில் காயமடைந்தவர்களுக்கு வெளியில் வைத்து சிகிச்சை அளிக்கமாட்டார்கள். போர்க்களத்தில் பூமிக்கு அடியில் ஒரு பங்கர் (சுரங்கம்) வைத்து அங்குதான் சிகிச்சை செய்வார்கள். நாம் செவிலியர்கள் என்று சொல்வது போன்றுதான் சல்லியர்கள். ராணுவத்தில் மருத்துவம் செய்யும் பிரிவினர்கள் தான் சல்லியர்கள் அவர்ளை பற்றிய கதைதான் இந்த படம். அவர்கள் எப்படி மருத்துவம் பார்க்கிறார்கள், அங்குபோர் நடந்தது எப்படி என்பதை விவரிக்கும்.
போர் குறித்த கதையில் காதல் காட்சிகள் அதில் இருந்து அவர்கள் எப்படி போரில் பங்கேற்கிறார்கள். மண்ணுக்காக என்னென்ன தியாகம் செய்கிறார்கள். இவை அனைத்தும் ஒரிஜினலாக இருப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. இலங்கை போரில் தமிழர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பதை எவ்வித சமரசமும் இன்றி படமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இங்கு மரணமடைந்த மக்கள் தங்களது மண்னை எவ்வளது ஆழமாக நேசித்தார்கள் என்பதையும், ஒரிஜினலாக படமாக்கப்பட்டு்ளளது. படத்தின் ஒரு காட்சியில், இரண்டு பேரை கண்ணை கட்டி நிர்வாணப்படுத்தி சுடுவார்கள். அதில் ஒருவரை சுடும் சத்தம் கேட்டு மற்றொருவர் மண்ணை இறுக்கமாக கட்டி பிடித்துக்கொள்வார். சாகும்போது கூட மண்ணுக்காகத்தான் சாவேன் என்பதை உணர்த்தும். இது உண்மையாக நடந்த சம்பவம்.
அதன்பிறகு பெண்கள் எப்படி போருக்கு செல்கிறார்கள், அவர்கள் ராணுவ மருத்துவத்திற்கு எப்படி படிக்கிறார்கள், அவர்கள் சல்லியர்களாக மாறுவதற்கு அவர்களின் குடுமம்பத்தினர் எந்த அளவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள், அதனால் அவர்கள் குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சினை என்ன? இதை எல்லம் கடந்து களத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை என்ன? என்பதை சல்லியர்கள் படம் விவாரிக்கும்.
அதேபோல் போரில் காயமடைந்த போராளிகளுக்கு மட்டுமல்லாமல், எதிர்தரப்பினருக்கும் சல்லியர்கள் சிகிச்சை அளிப்பார்கள். ஆனால் சிகிச்சைக்காக வரும் அவர்கள் எவ்வித ஆயுதங்களையும் கையில் வைத்திருக்க கூடாது. மருத்துவம் அனைவருக்கும் பொதுவானது என்பதால் இவ்வாறு செய்கிறார்கள். இது போரில் நடந்த உண்மை சம்பவம்.
மேதகு – சல்லியர்கள் இந்த இரண்டு படங்களிலும் எடிட்டிங்கில் நீங்கள் சந்தித்த சவால்கள்
மேதகு படம் ஒரு நான்-லீனியர் பேட்டனில் கதை இருக்கும். இந்த படத்தின் மொத்த சீனும் முதலில் வரவில்லை. முதலில் ஒரு தெருக்கூத்து சீன் மட்டும் வந்தது. அதை எடிட் செய்து முடித்தபோது அடுத்தடுத்து சீன்கள் வந்தது. அனைத்தையும் எடிட் செய்து ஒன்றாக இணைப்பது சவாலாக இருந்தது. தெருக்கூத்தில் படம் தொடங்கி அதில் சொல்லப்படும் ஒரு கதையில் இருந்து படம் தொடங்கும். நான் லீனியரில் இயக்குனர் ஸ்கிரீன்ப்ளே சிறப்பாக செய்திருந்தார். அதை எடிட்டிங்கில் சரியாக அமைப்பது சவாலாக இருந்தது.
ஆனால் சல்லியர்கள் திரைப்படம் மேதகுவை போல் இல்லாமல் முற்றிலும் மாறுப்பட்ட ஸ்கிரீன்ப்ளே. ஆனால் இந்த படத்தின் சீன்ஸ் எல்லாமே ஒரிஜினலுக்கு இணையாக இருந்ததால் எடிட் செய்யும்போது பார்க்வே முடியாது. ஒரு போராளி அடிப்பட்டார் என்றால் அவருக்கு அடிப்பட்ட இடங்களை ரொம்பவும் க்ளோஸ்அப்பாக எடுத்திருப்பார்கள். ரத்தம் வருவது காயங்கள் என அனைத்துமே ரியலிஸ்டிக்காக இருந்ததால் அதை பார்த்து எடிட் செய்வது சவாலாக இருந்தது.
அதேபோல் ஒரு சில சீன்கள் குளத்தில் வைத்து ஷூட் செய்திருந்தார்கள். அப்படி செய்யும்போது சவுண்ட் ரெக்கார்டு செய்ய முடியாது. இதனால் சில சீக்குவன்சில் சவுண்ட் இருக்காது அந்த சீன்களில் எல்லாம் நடிகர்களின் உதடு அசைவை வைத்துதான் எடிட் செய்தோம். இந்த மாதிரி சில சீன்கள் உள்ளது. இது ஒது புது அனுபவமாக இருந்தது.
உங்களின் அடுத்த படங்கள்
அடுத்து நடிகர் லாரன்ஸின் படம் போய்க்கிட்டு இருக்கு. ஒரு மலையாளப்படம், என்னை சுடும் பனி, 5 மொழிகளில் வெளியாகும் ஒரு பான் இந்தியா படம் ஆகிய படங்கள் வொர்க் போய்க்கிட்டு இருக்கு