மதுவந்தி வீடு ஏலத்துக்கு வந்தாச்சுஸ! விலை எவ்வளவு தெரியுமாஸ?
24 Oct,2022
ஒய் ஜி மதுவந்தியின் வீட்டுக்கான ஏல தொகையை நிர்ணயித்து நிதி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சென்னை: ஒய் ஜி மதுவந்தியின் வீட்டுக்கான ஏல தொகையை நிர்ணயித்து நிதி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாஜக பிரமுகர், நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகள் ஒய் ஜி. மதுவந்தி. சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆசியானா அபார்ட்மெண்டில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கினார்.
அதற்கான 2016ம் ஆண்டு இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்திடம் 1 கோடி ரூபாய் கடன் பெற்றார். சில மாதங்கள் மட்டுமே தவணை செலுத்திவிட்டு பின்னர் தொகையை கட்டாமல் இருந்திருக்கிறார்.
பணம் கட்ட சொல்லி பைனான்ஸ் நிறுவனம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் மதுவந்தி பணம் கட்டவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தை நாடிய பைனான்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கில் மதுவந்தியின் வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட வீட்டுக்க சீல் வைக்கப்பட்டது. இந் நிலையில் இந்த வீட்டை ஏலத்துக்கு விடுவதாக சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் நாளிதழ் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஏலத்தில் பங்கேற்க 15 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும், சொத்தின் அடிப்படையான தொகை ரூ.1.50 கோடி என்று தெரிவித்துள்ளது