பிரபல நடிகர் ஆனந்த கண்ணன் (48) மரணம்.. அதிகாலையில் நடந்த சோகம்..
08 Oct,2022
சிங்கப்பூர் தமிழரான இவர் தனியார் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார், 1990களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இடையே மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன்,
பிரபல சின்னத்திரை நடிகர் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஆனந்த கண்ணன் (48) இன்று அதிகாலை காலமானார், இது இறப்பு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இயல்பாகவே பெண்கள் மத்தியில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருந்தவர் ஆனந்த கண்ணன், எனவே ஆனந்த கண்ணனின் இந்த மரணச் செய்தி பெண்களின் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் தமிழரான இவர் தனியார் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார், 1990களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இடையே மிகவும் பிரபலமாக இருந்தவர் ஆனந்த கண்ணன், பெண் தொகுப்பாளி களுக்கு நடுவில் ஆண் தொகுப்பாளர்கள் டிவி நிகழ்ச்சியில் பிரபலம் ஆவதும், தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பதும் கடினமான ஒன்று, ஆனால் தொகுப்பாளர் ஆனந்த கண்ணனை பொருத்தவரை தனது நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சிரித்த முகத்தோடும் நடத்துவதில் ஆளுமை பெற்று சின்னத்திறையில் தனக்கென தனி முத்திரை பதித்தார். இந்நிலையில் அவர் புற்றுநோய் காரணமாக இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 30 ஆண்டு காலமாக ஒரு நிகழ்ச்சி படைப்பாளர் ஆகவும், நடிகராகவும் பலர் மனதில் இடம்பிடித்தவர் ஆனந்த கண்ணன்,
தனியார் கலை அமைப்பை நிறுவி அதன் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் கிராமிய கலைகளை இளைஞர்களுக்கு கற்பித்து வந்தார். புன்னகை மன்னன் ஆனந்த கண்ணன் என்று ரசிகர்களால் பட்டம் பெற்றவர் இவர். ஆனால் அவரின் புன்னகைக்கு பின்னால் இருந்த புற்றுநோய் என்னும் பெரிய சோகம் அவரின் பூவுலக வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது. புற்றுநோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.