விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் புதிய திரைப்படம் - சீமானின் அறிவிப்புக்கு என்ஐஏ
08 Oct,2022
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் ஒருவரின் வளாகத்தில் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை குறித்த திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ள நிலையில், இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சிவகங்கையில் உள்ள விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் குழுவினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர்.
மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாலைக்கு அருகில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டதாக சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் விக்னேஸ்வரனுக்கு தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், 27 வயதான அவர் சென்னையில் பணியாற்றி வருவதாகவும் காவல்துறையிர் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை ஒருங்கிணைத்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை செயலிழந்த விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வாளர் சபேசன் என்ற சத்குணம், கடந்த வருடம் ஒக்டோபரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
நடிகரும் இயக்குனருமான சீமான், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாக அறிவத்த பின்னணியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது