பாண்டியராஜன் - வினய பிரசாத் தம்பதியின் மகனான மாஸ்டர் மகேந்திரன் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருபவை. ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் நாயகனுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கி கிளைமாக்ஸை நோக்கி நகர்த்தியிருந்தவிதம் அக்மார்க் பாக்யராஜ் டச்.
1/ 10 திரைக்கதை மேதை என்றால் இன்னும் பாக்யராஜின் பெயர்தான் இன்டஸ்ட்ரியில் சொல்லப்படும். இப்போது அவரது திரைக்கதைகள் ஓடவில்லை எனினும், அவர் ஓட வைத்த படங்களின் திரைக்கதையிலிருந்த கற்றுக் கொள்ள மூளை நிறைய விஷயம் இருக்கிறது.
திரைக்கதை மேதை என்றால் இன்னும் பாக்யராஜின் பெயர்தான் இன்டஸ்ட்ரியில் சொல்லப்படும். இப்போது அவரது திரைக்கதைகள் ஓடவில்லை எனினும், அவர் ஓட வைத்த படங்களின் திரைக்கதையிலிருந்த கற்றுக் கொள்ள மூளை நிறைய விஷயம் இருக்கிறது.
2/ 10 பாக்யராஜை நாயகனாக்கி அழகுப் பார்த்தவர் அவரது குரு பாரதிராஜா. அந்த குரு பரம்பரையில் தனது சிஷ்யர் பாண்டிராஜனின் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, அப்படத்தை வெற்றியும் பெற வைத்தார் பாக்யராஜ். அந்தப் படம் 1995 இல் வெளிவந்த தாய்க்குலமே தாய்க்குலமே.
பாக்யராஜை நாயகனாக்கி அழகுப் பார்த்தவர் அவரது குரு பாரதிராஜா. அந்த குரு பரம்பரையில் தனது சிஷ்யர் பாண்டிராஜனின் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, அப்படத்தை வெற்றியும் பெற வைத்தார் பாக்யராஜ். அந்தப் படம் 1995 இல் வெளிவந்த தாய்க்குலமே தாய்க்குலமே.
3/ 10 பாக்யராஜின் மெகாஹிட் படமான முந்தானை முடிச்சின் சாயலில் இந்தக் கதையை அவர் எழுதியிருந்தார். முந்தானை முடிச்சில், மனைவியை இழந்து, கைக்குழந்தையுடன் கிராமத்துக்கு வரும் வாத்தியார் மீது இளம் பெண் காதல் கொண்டு, பொய் சொல்லி அவரை மணந்து கொள்வாள். இதில் அப்படியே உல்டா.
பாக்யராஜின் மெகாஹிட் படமான முந்தானை முடிச்சின் சாயலில் இந்தக் கதையை அவர் எழுதியிருந்தார். முந்தானை முடிச்சில், மனைவியை இழந்து, கைக்குழந்தையுடன் கிராமத்துக்கு வரும் வாத்தியார் மீது இளம் பெண் காதல் கொண்டு, பொய் சொல்லி அவரை மணந்து கொள்வாள். இதில் அப்படியே உல்டா.
4/ 10 குழந்தையில்லாத தம்பதிகளில் கணவன் சந்தர்ப்பவசத்தால் இன்னொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிவரும். ஒரு குழந்தையும் பிறக்கும். அக்குழந்தையை அனாதைக்குழந்தை என தத்தெடுத்து தனது வீட்டிலேயே நாயகன் வளர்ப்பான். அவனது மனைவிக்கு அந்தக் குழந்தைதான் உலகம் என்றாகிப் போகும்.
குழந்தையில்லாத தம்பதிகளில் கணவன் சந்தர்ப்பவசத்தால் இன்னொரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிவரும். ஒரு குழந்தையும் பிறக்கும். அக்குழந்தையை அனாதைக்குழந்தை என தத்தெடுத்து தனது வீட்டிலேயே நாயகன் வளர்ப்பான். அவனது மனைவிக்கு அந்தக் குழந்தைதான் உலகம் என்றாகிப் போகும்.
5/ 10 குழந்தையின் உண்மையான தாயான இரண்டாவது மனைவி வேலைக்காரியாக இவர்கள் வீட்டிற்கே கொண்ட வரப்படுவாள். இறுதியில் என்ன நடந்தது என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருந்தார்கள் கதை, திரைக்கதை எழுதிய பாக்யராஜும், வசனம் எழுதிய கிரேஸி மோகனும்.
குழந்தையின் உண்மையான தாயான இரண்டாவது மனைவி வேலைக்காரியாக இவர்கள் வீட்டிற்கே கொண்ட வரப்படுவாள். இறுதியில் என்ன நடந்தது என்பதை சிரிக்கச் சிரிக்க சொல்லியிருந்தார்கள் கதை, திரைக்கதை எழுதிய பாக்யராஜும், வசனம் எழுதிய கிரேஸி மோகனும்.
6/ 10 குழந்தையில்லாத தம்பதியாக பாண்டியராஜனும், ஊர்வசியிம் நடித்திருந்தனர். குழந்தையில்லை என்று இருவருக்கும் வருத்தம் உண்டு. ஆனால் பரஸ்பரம் புகார்கள் இல்லை. எனில் எப்படி கதை நகரும்? அதற்காக பாண்டியராஜனின் தந்தை கதாபாத்திரத்தை கொண்டு வருவார். அது ஆர்.சுந்தர்ராஜன். 'உனக்கு எந்தக் குறையும் இல்லை, உன் பொண்டாடிக்குதான் குறை. அதனால் இரண்டாவது கல்யாணம் பண்ணி ஒரு பேரக்குழந்தையை பெத்துத் தரலை, ஊரைக்கூட்டி செத்துப் போயிடுவேன்' என மகன் கையாலேயே விஷத்தை வாங்கி தின்கிற கதாபாத்திரம்.
குழந்தையில்லாத தம்பதியாக பாண்டியராஜனும், ஊர்வசியிம் நடித்திருந்தனர். குழந்தையில்லை என்று இருவருக்கும் வருத்தம் உண்டு. ஆனால் பரஸ்பரம் புகார்கள் இல்லை. எனில் எப்படி கதை நகரும்? அதற்காக பாண்டியராஜனின் தந்தை கதாபாத்திரத்தை கொண்டு வருவார். அது ஆர்.சுந்தர்ராஜன். 'உனக்கு எந்தக் குறையும் இல்லை, உன் பொண்டாடிக்குதான் குறை. அதனால் இரண்டாவது கல்யாணம் பண்ணி ஒரு பேரக்குழந்தையை பெத்துத் தரலை, ஊரைக்கூட்டி செத்துப் போயிடுவேன்' என மகன் கையாலேயே விஷத்தை வாங்கி தின்கிற கதாபாத்திரம்.
7/ 10 இந்த ராவடி பொறுக்காமல் நண்பன் கலைப்பித்தனிடம் (வடிவேலு) ஐடியா கேட்டு இரண்டாவது திருமணத்துக்கு மனைவி சம்மதிப்பாளா என டாக்டர் ஒருவர் மூலம் ஆழம் பார்ப்பது சிரிக்க வைக்கும் நகைச்சுவை. நேபாளத்துக்கு வேலை விஷயமாக செல்கையில் பாண்டியராஜன் சந்தர்ப்பவசத்தால் மணந்து கொள்ளும் பெண்ணாக வினய பிரசாத் நடித்திருந்தார். பிற்காலத்தில் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம்.
இந்த ராவடி பொறுக்காமல் நண்பன் கலைப்பித்தனிடம் (வடிவேலு) ஐடியா கேட்டு இரண்டாவது திருமணத்துக்கு மனைவி சம்மதிப்பாளா என டாக்டர் ஒருவர் மூலம் ஆழம் பார்ப்பது சிரிக்க வைக்கும் நகைச்சுவை. நேபாளத்துக்கு வேலை விஷயமாக செல்கையில் பாண்டியராஜன் சந்தர்ப்பவசத்தால் மணந்து கொள்ளும் பெண்ணாக வினய பிரசாத் நடித்திருந்தார். பிற்காலத்தில் சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் நடித்த அவருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம்.
8/ 10 பாண்டியராஜன் - வினய பிரசாத் தம்பதியின் மகனான மாஸ்டர் மகேந்திரன் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருபவை. ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் நாயகனுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கி கிளைமாக்ஸை நோக்கி நகர்த்தியிருந்தவிதம் அக்மார்க் பாக்யராஜ் டச். இதுபோன்ற படங்களில் யாரையாவது ஒருவரை கொன்று தியாகியாக்குவதுதான் வழக்கம். ஆனால், இதில், 'குழந்தைகிட்ட மட்டும் பங்கு கேட்காதே' என ஊர்வசி வினய பிரசாத்திடம் சொல்லிவிட்டு செல்வார். அதாவது புருஷனை பங்குப் போட்டுக்கோ. கணவனின் இரண்டாம்தாரமாக வினய பிரசாத்தை ஊர்வசி ஏற்றுக் கொண்டுவிட்டார்.
பாண்டியராஜன் - வினய பிரசாத் தம்பதியின் மகனான மாஸ்டர் மகேந்திரன் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருபவை. ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் நாயகனுக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கி கிளைமாக்ஸை நோக்கி நகர்த்தியிருந்தவிதம் அக்மார்க் பாக்யராஜ் டச். இதுபோன்ற படங்களில் யாரையாவது ஒருவரை கொன்று தியாகியாக்குவதுதான் வழக்கம். ஆனால், இதில், 'குழந்தைகிட்ட மட்டும் பங்கு கேட்காதே' என ஊர்வசி வினய பிரசாத்திடம் சொல்லிவிட்டு செல்வார். அதாவது புருஷனை பங்குப் போட்டுக்கோ. கணவனின் இரண்டாம்தாரமாக வினய பிரசாத்தை ஊர்வசி ஏற்றுக் கொண்டுவிட்டார்.
9/ 10 சென்டிமெண்டில் பிழிந்தெடுக்க வேண்டிய கதைக்கு சிரிக்கச் சிரிக்க நகைச்சுவை இழையோட திரைக்கதை அமைத்திருந்தார் பாக்யராஜ். படம் அமோக வெற்றியை பெற்றது. படத்தின் இறுதியில், சாக்கடைக்குள்ளிருந்து வடிவேலு கும்பிட்ட கைகளை உயர்த்தி, பாரதிராஜா ஸ்டைலில், 'என் இனிய இந்திய, நேபாள மக்களே இந்த கலைப்பித்தன் கலையார்வத்தால் செய்த இந்த சிறிய தவறை மன்னித்து, சிரித்து, சிந்தித்து, மீண்டும் மீண்டும் வந்து எங்களை சந்திப்பீர் வணக்கம்' என முடிப்பதுவரை பாக்யராஜின் பங்களிப்பு தூள் கிளப்பியிருக்கும்.
சென்டிமெண்டில் பிழிந்தெடுக்க வேண்டிய கதைக்கு சிரிக்கச் சிரிக்க நகைச்சுவை இழையோட திரைக்கதை அமைத்திருந்தார் பாக்யராஜ். படம் அமோக வெற்றியை பெற்றது. படத்தின் இறுதியில், சாக்கடைக்குள்ளிருந்து வடிவேலு கும்பிட்ட கைகளை உயர்த்தி, பாரதிராஜா ஸ்டைலில், 'என் இனிய இந்திய, நேபாள மக்களே இந்த கலைப்பித்தன் கலையார்வத்தால் செய்த இந்த சிறிய தவறை மன்னித்து, சிரித்து, சிந்தித்து, மீண்டும் மீண்டும் வந்து எங்களை சந்திப்பீர் வணக்கம்' என முடிப்பதுவரை பாக்யராஜின் பங்களிப்பு தூள் கிளப்பியிருக்கும்.
10/ 10 தாய்க்குலமே தாய்க்குலமே வெளியாகி நேற்றுடன் சரியாக 27 வருடங்கள் நிறைவடைக்கிறது. இன்றுவரும் 99 சதவீத படங்களைவிட சிறப்பாக பார்வையாளனை என்டர்டெயின் செய்யும் என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.
தாய்க்குலமே தாய்க்குலமே வெளியாகி நேற்றுடன் சரியாக 27 வருடங்கள் நிறைவடைக்கிறது. இன்றுவரும் 99 சதவீத படங்களைவிட சிறப்பாக பார்வையாளனை என்டர்டெயின் செய்யும் என்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு.