போண்டா மணிக்கு நடிகர் சங்கம் உதவிக்கரம்... நேரில் சென்று விசாரித்த மனோபாலா!
22 Sep,2022
பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துள்ளது. இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது சிகிச்சைக்கு உதவுமாறு சக நடிகரான பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், போண்டா மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றார். போண்டா மணியின் சிகிச்சைக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் அவர் கூறினார். மேலும் உறவினர்கள் யாராவது சிறு நீரகம் கொடுப்பார்களா என கேட்குமாறும் போண்டா மணியிடம் கூறினார் அமைச்சர் மா சுப்பிரமணியன்.
த்ரிஷாவுடன் போட்டி போடும் அதிதி ஷங்கர்!
இந்நிலையில் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் சங்கம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் மனோபாலா ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போண்டா மணியை இன்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு நிதியுதவியையும் வழங்கினார்