சினிமா வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு-

10 Sep,2022
 

 
 
 
 சேலத்தில் டைரக்டர் ஒருவர் சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை சீரழித்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அச்சம்பவம் அடங்குவதற்குள் கோவையிலும் அதேபோன்றதொரு சம்பவம் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது. கோவை: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் இன்று காலை கோவையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். நான் எனது 17 வயதில் கல்லூரியில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பேஸ்புக்கில் புதிய சினிமா படத்துக்கு கதாநாயகி தேர்வு நடப்பதாக கூறி அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அந்த அறிவிப்பு வெளியிட்டவரை தொடர்பு கொண்டேன். அதற்கு அந்த நபர் பொள்ளாச்சிக்கு வருமாறும், அங்கு தான் கதாநாயகி தேர்வு நடப்பதாகவும் தெரிவித்தார். அதனை நம்பி நான் பொள்ளாச்சியில் அவர் சொன்ன இடத்துக்கு சென்றேன். அங்கு கரூர் நல்லிப்பாளையத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இருந்தார். அவருடன் மேலும் சிலர் இருந்தனர். சிறிது நேரம் சினிமா தொடர்பாக அவர்கள் என்னிடம் பேசினர். பின்னர் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.
 
 
நானும் அந்த வாலிபரும் மட்டும் தனியாக அங்கு இருந்தோம். அப்போது எனக்கு அந்த வாலிபர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். நான் குளிர்பானம் குடித்ததும் மயங்கி விட்டேன். அதனை பயன்படுத்திக் கொண்ட வாலிபர் என்னை கற்பழித்தார். மறுநாள் காலை நான் விழித்தெழுந்து பார்த்தபோது நான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்தேன். இதனால் அந்த வாலிபரை நான் கண்டித்தேன், கண்ணீர் சிந்தித்தேன். உடனே அந்த வாலிபர் நான் தான் இந்த படத்துக்கு தயாரிப்பாளர். உன்னை கதாநாயகி ஆக்குவதோடு மட்டுமல்லாமல் உன்னையே திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தை கூறினார். அதனையும் நான் உண்மை என நம்பினேன். பின்னர் அடிக்கடி சினிமா டிஸ்கஷன் என்று என்னை பொள்ளாச்சிக்கு அழைத்தார். அப்படி பொள்ளாச்சிக்கு வரும்போது என்னை பலமுறை அவர் கற்பழித்தார்.
 
 
இதனால் என்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பிடிவாதம் பிடித்தேன். அப்போது கொரோனா நேரமாக இருந்ததால் ஆன்லைன் மூலம் பதிவு செய்து என்னை அவர் திருமணம் செய்தார். நாங்கள் கோவையில் வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போது தான் எனக்கு அந்த வாலிபர் பல பெண்களை ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் வந்தது. அதுபற்றி அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. என்னை ஊரறிய திருமணம் செய்து கொள் என்று சொன்னபோது என்னை விட்டு விட்டு அவர் தலைமறைவானார். கடந்த 2 மாதத்துக்கு முன்பு அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அதனை ஒரு பெண் எடுத்து பேசினார். எனது கணவரிடம் உனக்கு என்னடி பேச்சு என கூறி விட்டு போனை வைத்து விட்டார். அதன்மூலம் என்னை ஏமாற்றிய வாலிபர் மேலும் பல பெண்களை ஏமாற்றிய விவரம் உறுதியானது.
 
 
எனவே என்னை ஏமாற்றிய கரூர் வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறியிருந்தார். அந்த பெண்ணுடன் கோவை வேடப்பட்டியைச் சேர்ந்த 31 வயது பெண்ணும் வந்திருந்தார். அவரும் கரூர் வாலிபரால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். அவரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மற்றொரு மனு கொடுத்தார். அதில் நான் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தேன். அப்போது எனது திருமணத்துக்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தேன். அதனை பார்த்து கரூர் வாலிபர் என்னை தொடர்பு கொண்டார். மத்திய அரசு அலுவலகத்தில் பணியாற்றுவதாக ஏமாற்றி 2020-ம் ஆண்டு என்னை அவர் திருமணம் செய்து கொண்டார். 42 பவுன் நகை மற்றும் பணம் வரதட்சணை கொடுத்து எனது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.
 
 
 
வேடப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது மத்திய அரசு வேலை போய் விட்டதாகவும், தற்போது கடனை அடைக்க பணம் வேண்டும் என்றும் கேட்டார். ஒரு நாள் தூக்கில் தொங்குவது போல் நடித்தார். உடனே நாங்கள் சமாதானப்படுத்தி ரூ.15 லட்சம் பணம் புரட்டிக் கொடுத்தோம். அதன்பிறகு வங்கி பணிக்கு செல்வதாக கூறி எனது நகைகளை வாங்கி விற்றார். இதுபற்றி கேட்டபோது என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். மேலும் நாங்கள் 2 பேரும் தனிமையில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்டர்நெட்டில் பரப்பி விடுவதாக கூறி மிரட்டினார். இந்த விவகாரம் போலீஸ்நிலையம் வரை சென்றது. அதன்பிறகு என்னை விட்டுச் சென்றவர் திரும்பி வரவே இல்லை. இந்தநிலையில் என்னை போல் 10-க்கும் மேற்பட்ட பெண்களை அவர் ஏமாற்றிய விவரம் எனக்கு தெரிந்தது. திருவாரூர் கல்லூரி மாணவி ஒருவரும் அவரால் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். 2 பேரும் இன்று புகார் செய்வதற்காக வந்தோம். எங்களை போன்ற பெண்களை ஏமாற்றி நகை பறிக்கும் அந்த வாலிபர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். சேலத்தில் டைரக்டர் ஒருவர் சினிமா ஆசை காட்டி இளம்பெண்களை சீரழித்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் அடங்குவதற்குள் கோவையிலும் அதேபோன்றதொரு சம்பவம் நடந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies