தீவிர சிகிச்சை பிரிவில் பாரதிராஜா: கைவிட்ட உறவினர்கள்!
06 Sep,2022
இயக்குநர் பாரதிராஜா கடந்த 14 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவரது மருத்துவ செலவை அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஏற்றுள்ள தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
பின்பு, மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றார்.
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே என்னை நேரில் காண வர வேண்டாம். பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திக்கிறேன்" என்று அவரே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
தற்போது ஐசியூவில் 14 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவனை தெரிவித்துள்ளது.
ஐசியூ-வில் இருப்பதால், அவருக்கு மருத்துவச் செலவு அதிகரித்து வருகின்ற நிலையில், அவரது உறவினர்கள் யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லையாம்.
இதனை தெரிந்து கொண்ட புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், தற்போது பாரதிராஜாவின் மொத்த மருத்துவச் செலவையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் பாரதிராஜா வீடு திரும்பி விடுவார் என்று கூறுப்படும் நிலையில், உடனடியாக அவர் சினிமாவில் நடிக்க உடல்நிலை அனுமதிக்காது என்றும் குறைந்தது 50 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.