மதுரையில் நடிகர் சிம்புவின் 1000 அடி பேனர் அகற்றம்
20 Jul,2022
மதுரையில் நடிகர் சிலம்பரசனின் 1000 அடி பேனர் அகற்றப்பட்டது.
நடிகர் சிலம்பரசனின் அடுத்தப் படம் ‘மஹா’ ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், சென்னையில் 1000 அடி பேனரை அவரது ரசிகர்கள் கட்டினர். ஆனால், அந்த பேனர் அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டப்பட்டதால், அதனை காவல்துறை அதிகாரிகள் அகற்றினர்.
க்ரைம் திரில்லர் படமான ‘மஹா’ படத்தில் ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் சிலம்பரசன் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சிம்பு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'மாநாடு' படத்திற்குப் பிறகு, இந்தப் படம் வெளியாகிறது. ஆகையால் சிம்பு மீதான தங்கள் அன்பை காட்ட அவருக்கும் பெரிய பேனர் வைக்க முடிவு செய்தனர் அவரது ரசிகர்கள். இதையடுத்து மதுரையில் சிம்புவுக்கு 1000 அடியில் பேனர் வைக்கப்பட்டது. தற்போது அது அகற்றப்பட்டிருக்கிறது.
யு.ஆர்.ஜமீல் இயக்கிய 'மஹா' திரைப்படம், ஹன்சிகா மோத்வானியின் 50-வது படமாகும். மேலும் இப்படத்தில் ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா மற்றும் பேபி மானஸ்வி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சிறுவருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிராக போராடும் வலுவான கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் ஹன்சிகா மோத்வானியின் காதலனாக சிலம்பரசன் நடித்துள்ளார். காதலில் இருந்த சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்த பிறகு, 'மஹா' படத்திற்காக மீண்டும் இணைந்தனர். ரசிகர்கள் அவர்களை மீண்டும் திரையில் ஒன்றாகப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.