60 வது வயதில் 4வது திருமணம் செய்த பிரபல நடிகர்..பல்லு போன வயதில் பக்கோடா வா? பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்
24 Jun,2022
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமாக படங்களில் நடித்து வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர், தற்போது 60வது வயது நடிகரின் 4வது மனைவியாகி உள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமாக படங்களில் நடித்து வருபவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர், நூற்றுக்கு அதிகமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். சமீபத்தில், இவரது நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ‘வீட்டுல விசேஷம்’ படம் வெளியானது.
இவர் கன்னட நடிகர் சுசீந்திர பிரசாத் என்பவரை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க நடவடிக்கைகளில் நரேஷுடன் இணைந்து பணியாற்றியதால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் கண்ணோடு, கண் பார்த்து காதல் மலர இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்துள்ள 60 வயதான நரேஷ் ஆளுக்கு ஒரு வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வருகிறார். அதேபோன்று, பவித்ராவும், ஏற்கனவே ஒருவருக்கு 2-வது மனைவியாக இருந்தார்.
இந்த நிலையில், பவித்ராவுக்கு நரேஷ் 2-வது கணவராகி உள்ளார்.நரேஷ், பவித்ரா இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதால் தங்கள் புதிய திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 3 திருமணம் செய்து கொண்ட நரேஸுக்கு 4-வது திருமணம் தேவைதானா..? என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்று, எனக்கு நீ 4வது, உனக்கு நான் எத்தனாவது என்று வடிவேலு காமெடியை சொல்லி கிண்டலடித்து வருகிறார்கள்.