நயன்தாரா திருமணத்திற்காக தனி விமானத்தில் வந்தாரா அஜித்?
09 Jun,2022
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஜீத் சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்துள்ளதாக தெரிகிறது. தனி விமானம் அருகே ரசிகர் ஒருவருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து, தனி விமானத்தில் அஜித் சென்னை வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் தனி விமானத்தில் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா தனது திருமணத்திற்கு வருகை தரும்படி அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பிதழ் அளித்துள்ளார் என்றும் அதனால் முக்கிய நட்சத்திரங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாளைய நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அஜித் வந்தாரா?