கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் போதைப் பொருளை அழிப்பது தான் கதை.
ஆனால், விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வலிமை படம் எந்த இடத்தில் அதை தவற விட்டது என்பது குறித்து இங்கே லேசாக அலசுவோம்.
வலிமை கதை
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படம் கதையளவில் சிறந்த கதைதான். வேலையில்லாத இளைஞர்களை அதிலும் பைக் ஓட்டும் இளைஞர்களை டார்கெட் செய்து அவர்கள் மூலமாக சென்னையில் போதைப் பொருள் கடத்தலை சாத்தான் ஸ்லேவ்ஸ் எனும் வில்லன் செய்கிறார்.
நல்ல நோக்கம்
அதை தடுக்கும் அதிகாரியாக வரும் அஜித் குமாரும் பைக் ரேசராக இருந்து அதன் மூலமே போலீஸ் அதிகாரியாக மாறியவர் என்பதும், கடைசியில் வில்லனை வீழ்த்தி விட்டு மற்ற இளைஞர்களை அட்வைஸ் செய்து திருத்துவதாக நல்ல நோக்கத்துடனே உருவாக்கப்பட்டு இருக்கும்.
சென்டிமென்ட் பிரச்சனையா
தம்பி சென்ட்டிமென்ட், அம்மா சென்டிமென்ட் என வைத்தது தான் பிரச்சனை என்று பலரும் கூறியிருந்தார்கள். பெரிய படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் பலவீனமாக அமையாது என்பதற்கு அம்மா சென்டிமென்ட் வைத்த கேஜிஎஃப் 2 படமும் பேரக் குழந்தை சென்டிமென்ட் வைத்துள்ள விக்ரம் படமும் அந்த இடத்திலும் சறுக்காத நிலையில் வலிமை ஏன் சறுக்கியது என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.
இதுதான் பிரச்சனை
தேவையற்ற காட்சிகளை திரைக்கதை எழுதும் போதே வெட்டித் தூக்கி இருக்க வேண்டும். படத்தின் வேகத்தை அதிகரித்து இருக்க வேண்டும். 180கி.மீ., வேகத்தில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் எந்தளவுக்கு பரபரப்பை கொடுத்தனவோ அதே அளவுக்கு படத்தின் நீளமான 2 மணி நேரம் 58 நிமிடமும் அதே க்ரிப்னஸ் இருந்திருந்தால் வலிமையும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கும்.
விக்ரம் வெற்றிக்கு என்ன காரணம்
முகமூடி போட்ட மாயாவி யாரு, சூர்யா எப்போ வருவாரு, கமல் முதல் காட்சியிலேயே அப்படி கொடூரமாக கொல்லப்படும் நிலையில், அவர் எப்படி மீண்டு வருகிறார். கதாபாத்திரங்களின் டீட்டெய்ல், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னணியில் இருக்கும் குடும்ப பின்னணி என பல விஷயத்தை திரைக்கதையில் கொண்டு வந்ததது தான் விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணம்.
கரணம் தப்பினால் மரணம்
இந்த படத்தையும் கொஞ்சம் லேக் அடித்து சொல்லி இருந்தால், ஏகப்பட்ட குறைகளை ரசிகர்கள் கண்டு பிடித்து இருப்பார்கள். கேஜிஎஃப் படத்தில் ஹீரோ தனியாளாக அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தையே வீழ்த்துவது எல்லாம் லாஜிக் படி நடக்கவே நடக்காது. ஆனால், படத்தின் க்ரிப்னஸ் மற்றும் சரியான மேக்கிங் தான் நம்ப வைக்கிறது. அந்த மேஜிக்கை விக்ரம் படத்திற்கும் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ட்விஸ்ட்டே இல்லை
இதுபோல அஜித்தின் வலிமை படத்தில் எந்தவொரு ட்விஸ்ட்டும் இல்லாமல் படம் அப்படியே ஒரே நீண்ட ரயில் வண்டி பயணமாக தெரிந்த டிராக்கில் பயணித்தது தான் படம் சொதப்பியதற்கு காரணம் என்பது விமர்சகர்களின் கருத்தாக மட்டுமல்ல ரசிகர்களின் கருத்தாகவும் இருந்தது. அட்லீஸ்ட் அஜித்தின் தம்பி அந்த சாத்தான் ஸ்லேவ்ஸ் கேங்கில் இணைந்ததே வில்லனை பிடிக்க அஜித் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்சாக இருந்திருந்தால் வேறலெவலில் இருந்திருக்கும். நிச்சயம் ஏகே61 படத்தில் இதை சரி செய்து விட்டு வினோத் தரமான சம்பவம் செய்வார் என எதிர்பார்ப்போம். வெளியாகும் அத்தனை சினிமாவும் வெற்றி பெறக் கூடாது என யாருமே நினைக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.