சித்ரா தங்கிய ஹோட்டலுக்கு காரில் வந்த மாஜி அமைச்சர்கள் "இவர்கள்தான்".. போலீஸில் போட்டுடைத்த ஹேமந்த்?
08 May,2022
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு இரு மாஜி அமைச்சர்கள்தான் காரணம் என்றும் அவர்களின் பெயரையும் கணவர் ஹேமந்த் காவல் துறையினரிடம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ்
விஜே சித்ரா மிக குறுகிய காலத்தில் பெயரையும் புகழையும் சம்பாதித்தார். அது மட்டுமல்லாமல் ஆடி கார், சென்னையின் முக்கிய இடங்களில் ஃபிளாட்களை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இவற்றை லோன் போட்டு வாங்கியிருந்ததாகவும் தெரிகிறது. ஓராண்டுக்கு பிறகு சித்ராவின் மரண விவகாரம் சூடு பிடிக்கிறது. சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தன்னை மிரட்டுவதாக ஹேமந்த் புகார் அளித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து
உயிருக்கு ஆபத்து
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நிச்சயம் சித்ராவின் இறப்புக்கு காரணமானவர்கள் குறித்த ஆதாரங்களை போலீஸிடம் ஒப்படைப்பேன் என்கிறார் ஹேமந்த். சித்ராவின் மரணம் இரு வகைகளாக பார்க்கப்படுகிறது. ஒன்று மாஜிக்களுக்கு எதிராக குறை சொல்லும் ஹேமந்த், இன்னொன்று ஹேமந்தே நல்லவர் கிடையாது, கஞ்சா பழக்கம் கொண்டவர், டப்பா டப்பாவாக காண்டம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
சித்ரா மரணம்
சித்ரா மரணம்
சித்ராவின் மரணத்திற்கு என்னதான் காரணம் என்பது குறித்து புலனாய்வு பத்திரிகை நக்கீரன் புலனாய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வின்படி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன.
பத்திரிகையாளர் சந்திப்பில்
பத்திரிகையாளர் சந்திப்பில்
அதாவது சித்ராவின் மரணத்திற்கு காரணமானவர்களின் பெயர்களை போலீஸில் சொல்லிவிடுவேன் என ஹேமந்த் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் கூறி வருகிறாராம். ஆனால் அவர் உண்மையில் இரு மாஜி அமைச்சர்களின் பெயர்களை தெளிவாக கூறிவிட்டாராம்.
தென் தமிழகம், சென்னை
தென் தமிழகம், சென்னை
அவர்களில் ஒருவர் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர், அமைச்சராக இருந்தவர். மற்றொருவர் சென்னையை சேர்ந்த ஒரு மாஜி அமைச்சர். இவர்கள் இருவரும் சித்ரா தங்கியிருந்த பூந்தமல்லி ஹோட்டலுக்கு காரில் வந்ததாக ஹேமந்த் போலீஸ் விசாரணையில் கூறியதாக நக்கீரன் புலனாய்வில் சொல்லப்பட்டுள்ளது.