வில் ஸ்மித்தின் ஆஸ்கர் விருது பறிக்கப்படுகின்றதா?
29 Mar,2022
.
ஆஸ்கர் விருது விழா மேடையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதுடன், இன்ஸ்டாகிராமிலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். உலக சினிமா கலைஞர்களை கவுரவிக்கும் 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த விழாவை தொகுத்து வழங்கிவந்த கிறிஸ் ராக் திடீரென அங்கிருந்த வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலைமுடியைப் பார்த்து கிண்டல் செய்த நிலையில், முதலில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித் திடீரென கோபத்தில் மேடைக்கு வந்து பளார் என கன்னத்தில் அறைந்தார்.
செய்தார். சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக ஜடா பிங்கெட் தலைமுடியை இழந்திருந்தார். இதனால் முதலில் சிரித்துக் கொண்டிருந்த வில் ஸ்மித் பிறகு திடீரென கோபம் வந்து விழா மேடைக்கே சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டார்.
பின்பு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை பெற மேடைக்கு சென்ற வில் ஸ்மித், கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார். அவ்வாறு மன்னிப்பு கேட்கையில், ஆஸ்கர் அகாடமியிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எனது சக நாமினிகள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
இது ஒரு அழகான தருணம், விருதை வென்றதற்காக நான் அழவில்லை. காதல் உங்களை பைத்தியக்காரத் தனமான செயல்களைச் செய்ய வைக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராமில் வில் ஸ்மித் பகிரமங்கமாக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
வில் ஸ்மித்தின் இந்த செயலுக்கு ஆஸ்கர் விருது குழு கண்டனம் தெரிவித்த நிலையில், விசாரணையையும் தொடங்கி இருக்கின்றது.
தவறான நடத்தை, தொல்லை தருதல், பாரபட்சம் காட்டுதல் போன்ற காரணங்களுக்காக ஆஸ்கர் விருது பறிக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
வில் ஸ்மித்தின் இந்த தவறுக்கு ஆஸ்கர் விருது கமிட்டி இவ்வாறான தண்டனையை வழங்குமா? என்றும் கேள்வி எழுந்து வருகின்றது.